என் மலர்
கடலூர்
- கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
தமிழக விளையாட்டுதுறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த பரம ஹம்ச ஆச்சார்யா சாமியாரை கண்டித்து கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமையில் கடலூரில் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ இள. புகழேந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் , பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகரத் துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் முருகன், கவுன்சிலர்கள்ஆராமுது, சுபாஷிணி ராஜா, கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர்கள் லெனின், கார் வெங்கடேசன், ஜெயசீலன்,இளைஞரணி ஜெயச்சந்திரன்,கோபி, உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.
கடலூர்:
இந்து முன்னணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்றார். வெங்கடேசன், பெருமாள், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சனில் குமார் கலந்து கொண்டு கண்ட உரை ஆற்றினார். அப்போது கடலூர் புதுநகர் போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். அப்போது இந்து முன்னணியிருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்தனர்.
- நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர்.
- சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் , என்.எல்.சி. யில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்து நிரந்தர வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் இருந்து மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலையில் மாவட்ட செயற்குழு சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கொண்டிருந்தபோது, போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 200 பேரை கைது செய்தனர்.
- வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர்.
- விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மகன் வினித்குமார் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். அப்ேபாது பண்ருட்டியில் இருந்து வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி, மகன் வினித்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
- 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.
கடலூர்:
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கொண்டு கடத்தி செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. அதன் பேரில் பண்ருட்டி அருகே கொள்ளுகாரன் குட்டை பகுதியில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை போலீசார் ராஜா கோவிந்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது அவ்வழியாக வேன் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது, மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி, வாகனம் மற்றும் அந்த நபரை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முருக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 51). இவர் தனது வேனில் 55 அரிசி மூட்டையில் சுமார் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசியை சேலம் மாவட்டம் தலைவாசல் கோழி பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார்.
- விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சியில் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்.
இவர் தனது மனைவியுடன் காரில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் பகுதியில் வந்தது.
அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசும், அவரது மனைவியும் காப்பாற்ற யாராவது அந்த வழியாக வருகிறார்களா? என்று பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக வரவில்லை.
இதனால் ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார். மேலும் போன்மேப் மூலம் அவர்கள் வாய்க்காலில் சிக்கி கொண்ட இடத்தை தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கிய ரமேசையும், அவரது மனைவியையும் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். பின்னர் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த காரை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.
- கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர்.
- அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு அளவீடு செய்யும் பணி செய்வதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அதிகாரிகள் எடுத்த அளவீடு சரியான முறையில் இல்லை எனக் கூறி அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, கல்வி செல்வன், கணேசன், ராஜி, நகர செயலாளர் திருமாறன், தமிழ் ஒளி, அம்பேத், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உட்பட 13 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 4 மணியளவில் லேசான காற்று வீசியது.
- அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடம் வாங்கி விற்பதை பத்திர பதிவு சம்பந்தமாகவும், கடன் பைசல், அடமானம் உள்ளிட்ட பத்திரப்பதிவு சம்பந்தமாகவும் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் லேசான காற்று வீசியது. இதில் சார் பதிவாளர் அலுவலக பெயர் பலகை அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மீது விழுந்தது.
இதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மேலும், மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உடைந்தது. காயமடைந்த செல்வராஜ், இது குறித்து சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் கூறினார். இதற்கு பணியில் இருந்த ஊழியர்கள். போலீஸ் நிலையம் சென்று புகார் அளியுங்கள், எங்களிடம் ஏன் சொல்கிறீர்கள் என்று அலட்சியமாக செல்வராஜி டம் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் செல்வராஜை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் செல்வராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் விசாரணை நடத்தி வருகின்றார். அரசு அலுவலகத்தின் பெயர் பலகையை முறையாக அமைக்காததால் கீழே விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 பேர் மீது வழக்கு பதிவு
- ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார்.
கடலூர்:
புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள்கோமதி (19 ) இவர்பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தார். கடந்த 3-ந் தேதி இரவு11மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோமதி திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் அவரது தந்தை ஆறுமுகம் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரில் பலாப்பட்டுவை சேர்ந்தர் பாலமுருகன் ஆசை வார்த்தை கூறி தனது மகளை கடத்தியதாக கூறியிருந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கோமதி, பாலமுருகனை திருமணம் செய்து கொண்டு நேற்று மாலை புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போதுஇரு குடும்பத்தை சேர்ந்த மற்றும் ஊர் தரப்பினர்கள் 30 பேர்கள் அங்கு திரண்டனர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காதல் திருமணத்திற்கு உதவியாக இருந்ததாகபலாப்பட்டு பசுபதி (29), லட்சுமிபதி (31),ஆகிய இருவருக்கும் அடி உதை விழுந்தது இதில் காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டன இதுகுறித்து பசுபதி கொடுத்த புகாரின் பேரில் சிறு கிராமத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், சிவசுப்பிரமணியன், மணிகண்டன்,கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.
- படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் 63- ம் ஆண்டு செடல் மற்றும் சாகை வார்த்தல் பிரம்மோற்சவ விழா கடந்த 31 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலம் லிங்கா ரெட்டி பாளையம் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு தட்டாஞ்சாவடி காளி கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. வருகிற 8-ந் தேதி செடல் உற்சவம் மற்றும் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 9 -ந் தேதி மஞ்சள் நீர் விழாவும், 15 -ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கடலூர்:
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-
இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடாகும். இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பா.ஜ.க. அரசின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, இறையாண்மை எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும். பாசிச நடவடிக்கை என்பது விஷ விதை மண்ணில் புதைப்பதாகவும், ஆகையால் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்க்க வேண்டும்.
ஆகையால் மத்திய அரசு உடனடியாக இக்குழுவை திரும்பப் பெற வேண்டும். ஒற்றை ஆட்சி முறை பேராபத்தும் பெரிய அபாயத்தையும் விதைக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக அதிமுகவினர் மிகப்பெரிய ஊழல் செய்து உள்ளனர். அதனை தற்காத்துக் கொள்வதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆதரித்து உள்ளனர். அவர்கள் இந்தியாவை பாதுகாத்திட வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசு 7.5 லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை வீண் செய்துள்ளதாக இந்திய தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. இதில் தமிழகத்தில் 5 சுங்கசாவடியை சோதனை செய்தபோது சுமார் 128 கோடி கார்ப்பரேட் நிறுவனம் கொள்ளை அடித்திருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக 5 சுங்கச்சாவடியை இழுத்து மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினர் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக சட்டம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை கொண்டு வந்தாலும், கொசு, காலரா ஒழித்தது போல் பாசிச தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.
இவ்வாறு கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.






