சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி பெயிண்டர் பலி

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார்.
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி பெயிண்டர் பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடகுதெரு புளியந்தோப்பு கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மதியழகன் (வயது 24) பெயிண்டர்.இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்தபோது எதிரே வந்த மினி லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com