search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chelliyamman temple"

    • நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பழமை வாய்ந்த செல்லி யம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. வராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, வராஹி அம்மன் சிற ப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராமு பூசாரி செய்திருந்தார்.

    • முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா நடந்தது.
    • கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் மையப்பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு 46 -ம் ஆண்டு பூச்சொறிதல் விழா தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று செல்லியம்மன் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கனக்கான பொதுமக்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு , தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ×