என் மலர்
கடலூர்
பண்ருட்டி அருகே லாரி மற்றும் பள்ளி வேன் மோதிய விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வேன் டிரைவராக மேலிருப்பு பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் (வயது 27) என்பவர் உள்ளார்.
இவர் மேலிருப்பு பகுதியில் உள்ள மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக இன்று காலை வேனில் புறப்பட்டார். பின்னர் 30 மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு அதே வேனில் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்த வேன் காடாம்புலியூர் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. முன்னால் ஒரு கார் மற்றும் பஸ், லாரி ஆகியவையும் சென்று கொண்டிருந்தன.
அப்போது கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த பஸ், லாரி மற்றும் பள்ளி வேன் ஒன்றன் பின் ஒன்றாக பின்னால் மோதி கொண்டன.
இந்த விபத்தால் மோதிய அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. பள்ளி வேனை ஓட்டி வந்த டிரைவர் தமிழ்மாறன் மற்றும் வேனில் இருந்த ஆத்திரிகுப்பத்தைச் சேர்ந்த ஷாலினி (13), மேலிருப்பு பகுதியை சேர்ந்த தேவராஜ் (11), சதீஷ்குமார் (11), கோபிநாத் (12) உள்பட 10 மாணவ-மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்துகளால் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்கு வரத்தை சரி செய்தனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அறை அருகில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் முதுநகர் செட்டி கோவில் தெருவில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோவில் தற்போது இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகர், சோமாஸ்கந்தர், நடராஜர், சிவகாமசுந்தரி என 26 ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளன. பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் உரிய பாதுகாப்பு வசதி இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சுபத்ரா, எழுத்தர் திருநாவுக்கரசு மற்றும் கோவில் ஊழியர்கள் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அவர்களுடன் பாதுகாப்பு பணியில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அங்குள்ள ஊழியர்களிடம் ஐம்பொன் சிலைகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும், அதனை பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்க உள்ளோம், எனவே ஐம்பொன் சிலைகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் முன்னிலையில் அதிகாரிகள், போலீசார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சன்னதி, நடராஜர் சன்னதி கதவுகளை திறந்தனர். பின்னர் 2 அறைகளிலும் இருந்த 26 ஐம்பொன் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வேனில் ஏற்றி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள பாதுகாப்பு மையத்தில் ஐம்பொன் சிலைகளை வைத்தனர்.
இது குறித்து உதவி ஆணையாளர் ரேணுகாதேவி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 ஆயிரம் ஐம்பொன் சிலைகள் உள்ளது. இதனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள ஐம்பொன் பாதுகாப்பு மையத்தில் (ஐ-கான் சென்டர்) 182 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் முதுநகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த 26 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினோம். அந்த சிலைகளும் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத 105 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமராவும், அலாரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 70 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் விசேஷ காலங்களில் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள அறை அருகில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. எனவே 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோல் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்மணி (62). விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீடு கிரக பிரவேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 22-ந்ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டு பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி மணி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ், குற்றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் லூயில்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் வரவழைக்கப்ட்டனர்.
மோப்ப நாய் அர்ஜூன் மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. அது விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் அது நடக்கும் என்று டி.டி.வி. தினகரன் பேசினார்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் தீபா பேரவை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. அம்மா அணியில் இணையும் விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்தார். பாலக்கரை அருகே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
விரைவில் வர இருக்கின்ற ஆர்.கே.நகர் தேர்தலாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் நடைபெற உள்ள எந்த தேர்தலாக இருந்தாலும் சரி சசிகலா பொதுச்செயலாளராக தலைமை ஏற்றுள்ள அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.

தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. அது விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் அது நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் அங்கிருந்து விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வனின் வீட்டுக்கு சென்றார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விருத்தாசலம் பகுதியில் ஒரே நாளில் 3 கோவில்களில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனுவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் முடிந்த பின் பூசாரி ராஜேந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார்.
நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி மற்றும் உற்சவர் அம்மன் சிலையிலிருந்த 2 பவுன் தாலி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து கோவிலிருந்து வெளியே தூக்கி சென்றனர். அதிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே பரவளூர் அண்ணா நகர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
மேலும் பரவளூர் ஆலயம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்கள்.
இதுகுறித்து விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
3 கோவில்களிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஒரே கும்பல் 3 கோவில்களிலும் கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி ரூ.13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியது. இதை கண்டித்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு கடந்த 1-ந் தேதி ரூ.13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தியது. இதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள ரேசன்கடை முன்பு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது ரேசன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், பொதுகுழு உறுப்பினர் குறிஞ்சிபாடி பாலமுருகன், ஒன்றிய செயலாளர் காசி ராஜன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், வி.ஆர்.அறக்கட்டளை உரிமையாளர் விஜயசுந்தரம், மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள ரேசன்கடை எதிரில் மாநில தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலை வகித்தார். ரேசன் கடையில் சர்க்கரை விலையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டன.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், தொ.மு.ச. தலைவலல் பழனிவேல், நிர்வாகிகள் பெரியசாமி, ஜெயசீலன்,மணிகண்டன் உட்பட தி.மு.க., காங்கிரஸ் கட்சினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 363 ரேசன்கடைகள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழைய ஜெயில் தெருவில் உள்ள 2 ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர துணை செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.
இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிங்காரவேல், வள்ளலார் குடில் டாக்டர் இளையராஜா, வக்கீல் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வக்கீல் மணிகண்டராஜன், கர்ணன், வெங்கடேசன், சரவணன், வட்டசெயலாளர் பாலு, பாண்டியன், ரவி, மதியழகன், குமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருத்தாசலம் சாவடிகுப்பத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், வக்கீல் அருள்குமார், நகர இளைஞரணி பொன்.கணேஷ், ஆனந்த், சுந்தரமூர்த்தி, மதிவாணன், ராஜேஷ், பன்னீர், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உள்ள ரேசன்கடை முன்பு ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் தங்கஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வடலூர் பஸ்நிலையம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பரவளுர் கிராமத்தில் இன்று விவசாயிகள் கம்புகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவளுர், கச்சிபெருமாநத்தம், கோ.மங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நெல், கடலை, கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
அந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மின்சாரம் அடிக்கடி தடைஏற்பட்டது. மேலும் மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை. ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.இதனால் நெல் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
பரவளுர் கிராமத்தில் இன்று விவசாயிகள் கம்புகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் வயல்களின் வரப்புகளில் நட்டனர். மேலும் அவர்கள் கருப்பு கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

பண்ருட்டியில் போலீசாரைபணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் பண்ருட்டி காந்தி ரோடு வழியாக காரில் வந்து கொண்டு இருந்தார்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது இவரது காருக்கு வழிவிடாமல் தகராறு செய்த வாலிபர்களை காரில் வந்த சிலர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை அவர்களை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓன்றிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீபால் (28),மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மொய்தீன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தனது காருக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் தொடர்பாக இன்று (21-ந் தேதி) மாலை பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

10-ம் வகுப்பு மாணவியை கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்:
திட்டக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி. 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்குள்ள விவசாய நிலத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது மோசட்டை கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29) என்பவர், சிறுமியின் வாயில் துணியை வைத்து, அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். பின்னர் இதுகுறித்து சிறுமி, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.

விருத்தாசலத்தில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவள்ளுவர் 13-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 47). இவரது மனைவி கலைச்செல்வி(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு பாலசுப்பிரமணியன் அரியலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதை அறிந்த மர்மமனிதர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த 3 பீரோக்களை உடைத்தனர். அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். நேற்று இரவு பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறிக்கிடந்தன. அதில் இருந்த பணம்-நகை கொள்ளை போயிருந்தது. மொத்தம் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்தகொள்ளை குறித்து பாலசுப்பிரமணியன் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் புருனே வரவழைக்கப்பட்டது. அது கொள்ளைநடந்த வீட்டை மோப்பம் பிடித்து வீட்டை விட்டு வெளியே வந்தது. அது சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்தகொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீரோக்களில் இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடக்கும் காட்சி.

ஸ்ரீமுஷ்ணம் அருகே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மணல்குவாரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி வெள்ளாற்றில் அரசு மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துசெல்லப்படுகிறது.
இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மழை பெய்த தால் கடந்த 15 நாட்களாக குவாரியில் மணல் எடுக்க லாரிகளை அனுமதிக்கவில்லை. நேற்று முதல் மணல்குவாரி வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.
இந்தநிலையில் இன்று காலை மணல் எடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட லாரிகள் குவாரியில் காத்து நின்றன. அப்போது ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பூண்டிகிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மணல்குவாரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் லாரிகள் மணல் ஏற்றி வரமுடியாமல் அங்கேயே நிற்கின்றன. இதனால் குவாரியில் மணல் அள்ளும்பணி பாதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மீட்டர் பாக்சில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அவசர, அவசரமாக அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி அங்கு மின்சப்ளையை தடை செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி இருளில் மூழ்கியது. உடனடியாக மின்சப்ளை தடை செய்யப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த மீட்டர் பாக்ஸ் சீரமைக்கப்பட்டது. நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு திரும்பினர். ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.