என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration store"

    திருவாரூர் ரேசன் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். #ministerkamaraj

    திருவாரூர்:

    தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் முழுநேரமும் செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவாரூர் நகராட்சி குட்பட்ட கீழவீதி நியாயவிலைக் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண்டிகை நாட்களில் பொதுவிநோகத்திட்ட பொருட்களை எந்தவித சிரமம்மின்றி பொதுமக்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விடுமுறை தினத்திலும் தீபாவளிக்கு முதல்நாள் வரை நியாயவிலைக்கடைகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்ற உத்தரவினை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையிலும் நியாயவிலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தையும், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினையும் அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பொதுவிநியோக திட்டத்தை பொறுத்தவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தாசில்தார் குணசீலி, வட்ட வழங்கல் அலுவலர் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ministerkamaraj

    ஆலந்தலையில் கனிமொழி எம்.பி நிதியில் கட்டப்படவுள்ள ரேசன்கடைக்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கிராமத்தில் அந்த பகுதி மக்கள் ரேசன் கடை, மீன் வலைக்கூடம் ஆகியவற்றிற்கு புதிதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் கோரிக்கையை ஏற்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கனிமொழி எம்.பி தனது நிதியில் இருந்து ரேசன்கடை அமைக்க ரூ10 லட்சம், மீன் வலைக்கூடம் அமைக்க ரூ25 லட்சம் என மொத்தம் ரூ35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலந்தலை கிராமத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, நகர செயலாளர் வாள் சுடலை, முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், சுதாகர், ஆலந்தலை ஊர் நல கமிட்டி தலைவர் அந்தோணி, கொம்பீரியர் சபை சந்திரலோபோ, வார்டு செயலாளர் லெவி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் சிதிலமடைந்து உள்ளது.

    பல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால் மிகுந்த அச்சத்துடனேயே பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு வந்து சென்றனர்.

    நேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 32).தனது மகன் கருப்பசாமியுடன் (10) ரே‌ஷன் கடைக்கு வந்தார். அவர்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற போது, சிதிலமடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    இதில் பாண்டி, கருப்பசாமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரே‌ஷன் கடை 15 ஆண்டுகளுக்கு முன் புள்ள கட்டிடத்தில் செயல்படுவதால், வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×