என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே ரேஷன் கடை மேற்கூரை இடிந்ததில், தந்தை-மகன் காயம்
ரேஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் சிதிலமடைந்து உள்ளது.
பல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால் மிகுந்த அச்சத்துடனேயே பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வந்து சென்றனர்.
நேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 32).தனது மகன் கருப்பசாமியுடன் (10) ரேஷன் கடைக்கு வந்தார். அவர்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற போது, சிதிலமடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதில் பாண்டி, கருப்பசாமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரேஷன் கடை 15 ஆண்டுகளுக்கு முன் புள்ள கட்டிடத்தில் செயல்படுவதால், வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






