search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.டி.வி. தினகரன்"

    அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள்ளனர். #TTVDinakaran #Panneerselvam #Abdulkalam
    ராமேசுவரம்:

    அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகிற 27-ந்தேதி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தர உள்ளனர்.

    ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளது. இங்கு கலாமின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் அடங்கிய பல புகைப்படங்களும், ஓவியங்களும், அவரது பல கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றுள்ளது. கலாம் மணிமண்டபத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவ-மாணவிகளும் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கலெக்டர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த ராமேசுவரத்துக்கு வருகை தர உள்ளனர்.

    இதே போல் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள் ளன. ராமேசுவரம் முதல் ராமநாதபுரம் வரை உள்ள 40 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மழை நீர் சேகரிப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல விதமான போட்டிகள் இன்று முதல் வருகிற 26-ந் தேதி வரை நடத்தப் படவுள்ளது.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் 600 மாணவர்களுக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் நினைவு தின நிகழ்ச்சியில் 1000 மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதை வலியுறுத்தி மாணவர்களுக்கு 500 புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. இந்த தகவலை கலாமின் பேரனும், கலாம் பவுண்டேஷன் பொறுப்பாளருமான ஷேக் சலீம் கூறினார். 
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் உறவினர் ராஜராஜன் ஆகியோர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

    பின்னர், அவர்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. பின்னர் சிறை முன்பு டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு நிச்சயம் வரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். 18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற கோருவார்கள். நான் ஆட்சி வேண்டாம் என சொல்கிறேன். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை கூறுகிறேன். தியாகம், தர்மம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தர்மபுரியில் டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? ஏன் மறுக்கின்றனர்? என்று போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #TTVDinakaran
    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது.

    ஆனால், போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதையடுத்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எங்கள் கட்சியின் நிறுவனர் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ளும் இந்த பொதுக்கூட்டம் என்பதால், போலீசார் உள்நோக்கத்துடன் அனுமதி வழங்க மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ராஜா, இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கினால் என்ன? போலீசார் ஏன் மறுக்கின்றனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். #TTVDinakaran
    அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது என்று கோபியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #TTVDinakaran
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும்.

    சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள் ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.#ADMK
    சென்னை:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் புதிதாக ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் கே.பி.கோபிநாத், ஆலந்தூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் டி.கண்ணன், துணை தலைவர் வாட்டர் கே.சரவணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் எஸ்.கவுதம் சுரேஷ், 164-வது வட்ட கழக செயலாளர் புல்லட் கே.ராஜேஷ் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த ஆலந்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் வி.ரமேஷ், 156-வது வட்ட துணைச் செயலாளர் பி.சுந்தர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தீபா பேரவை தலைவர் எம்.ஜி.ஆர்.விமலானந்தர் உள்பட 100 பேர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    ×