search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளிகள் ஓட்டம்"

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் நோயாளிகள் பயந்து ஓட்டம் பிடித்தனர். #VirudhachalamClash
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அம்புஜவல்லிபேட்டையில், இரண்டு குடும்பத்தினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர்  தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக வந்தனர்.

    அப்போது, இரு தரப்பினருக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் பயந்துபோன மற்ற நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் போலீசார் வந்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #VirudhachalamClash
    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் வார்டில் உள்ள டைல்ஸ் திடீரென்று உடைந்து நொறுங்கியதால், அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வரு கிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் உள்நோயாளியாக 200 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். இங்குள்ள ஆண்கள் வார்டில் உள்நோயாளியாக 30 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு ஆண்கள் வார்டில் போடப்பட்டு இருந்த டைல்ஸ் திடீரென்று உடைந்து நொறுங்கியது. இதன் சிதறல்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மீதும் விழுந்தது. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என பயந்து போன நோயாளிகள் பயந்து அலறியபடி வார்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தலைமை மருத்துவர் சிவபாலன் அங்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

    தாராபுரம் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் பிரிவு வார்டு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. அப்போது தரையில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மறு சீரமைப்பு நடைபெற்ற போது, தரை தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டது. தற்போது தாராபுரம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஆனால் ஆஸ்பத்திரி உள்நோயாளிகள் பிரிவு கட்டிட வளாகத்திற்குள் வெப்ப உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் டைல்ஸ் உடைந்து நொறுங்கி உள்ளன. இதனால் உள்நோயாளிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து உள்நோயாளிகள் சிலர் கூறியதாவது “இவை தரமற்ற டைல்ஸ்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை. எங்களுக்கு அந்த வார்டுக்கு சென்று சிகிச்சைபெற பயமாக உள்ளது. எனவே வேறு வார்டு ஒதுக்க வேண்டும், மேலும் அதிகாரிகள் இந்த கட்டிடம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர். 
    ×