என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
விருத்தாசலம் பகுதியில் புயலின் காரணமாக நேற்று மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முழுவதும் காற்று பலமாக வீசியது. விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
நகரப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் மழை நீரும் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்திருக்கிறது.
அப்பகுதியில் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் பள்ளி வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அப்பகுதி மக்கள் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். மாடுகளின் கழிவால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருத்தாச்சலம் பஸ் நிலையம் கடைவீதி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
விருத்தாசலம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் சரி வர தூர் வாரப்பட வில்லை. இதனால் மழைநீர் செல்லும் வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாய நிலங்களில் பொழிய கூடிய மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் நிலங்களிலேயே தேங்கி நிற்கிறது. தற்போதைய சம்பா சாகுபடி நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் மணவாளநல்லூர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல விருதாச்சலம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் ஆங்காங்கே விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. #heavyrain #gajacyclone
கடலூர்:
வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று இரவு நாகப்பட்டினம் பகுதியில் கரையை நெருங்கியது. அப்போது நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது. இந்த கஜா புயலின் கபளிகரம் கடலூர் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. நேற்று நள்ளிரவு பலத்த சத்தத்ததுடன் காற்று வீசியது.
சாலைகளில் இருந்த மரங்கள் அனைத்தும் காற்றில் ஆடி, அசைந்தன. அப்போது பலத்த மழையும் கொட்டியது. கஜா புயலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இதனால் கிராமங்கள் அனைத்தம் கும்இருட்டானது. கடலூர் நகரில் சூறாவளிக்காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கடலூர் செம்மண்டலம், சாவடி, கோண்டூர், புதுச்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்களும் சாய்ந்தன.
கடலூர் பகுதியில் தாழங்குடா பகுதியில் கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்களும் சூறாவளிக் காற்றில் சாய்ந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அதுபோல் மின்சார ஊழியர்களும் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். #gajacyclone
கஜா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இந்த விடிய, விடிய பெய்தது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ஆனந்த் உடலைக் கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன ஆனந்த்க்கு சுந்தரி(35) என்ற மனைவியும், சார்யா(11) என்ற மகனும், அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர். #GajaCyclone #Gajastorm
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேபோல் நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யலாம் என்பதால் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். #GajaStorm #Schools #Holiday
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 19 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 19 இடங்களை தேர்வு செய்து துணை கலெக்டர் தலைமையில் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தக் குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்து வெள்ளம் சூழக்கூடிய பகுதியை கண்டறிந்து அந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு 42 நிரந்தர தங்குமிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆபத்துக்களை உணர்ந்து 191 தற்காலிக தங்குமிடம் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தை தாக்கினாலும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 245 ஜே.சி.பி எந்திரம், 167 மரம் அறுக்கும் கருவிகள், 91 ஆயிரம் மணல் மூட்டைகள், மக்களை மீட்கக்கூடிய ரப்பர் படகு, பைபர் படகு தயார் நிலையில் உள்ளது. மேலும் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து வெள்ளம் சூழ்ந்து மக்களை பாதித்தால் அந்தப் பகுதிகளுக்கு 28 படகுகள் மற்றும் 56 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரத் துறைமூலமாக மருத்துவ குழுக்கள், 35க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து புயல் தாக்கிய பின்பு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான அனைத்து மாத்திரை மருந்துகள் கொடுத்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் செயல்படுவதற்கும் அங்கு பணியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் மின்சார வசதி இல்லை என்றாலும் கண்டிப்பாக மருத்துவமனை மின்சார வசதியுடன் இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் ஒரு குழுவும் சிதம்பரத்தில் ஒரு குழுவும் பரங்கிப்பேட்டையில் ஒரு குழுவும் தங்கி உள்ளனர். மேலும் பேரிடர் காலத்தில் மீட்புக் குழுவில் ஈடுபட 117 காவலர்கள் தயார் நிலையில் ஏற்படுத்தி உள்ளோம்.
இதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளது. ஆகையால் கஜா புயல் பற்றி பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #CuddaloreCollector #Anbuselvan

மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.
கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:-
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.
கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.
படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #GajaStorm #NationalDisasterRescueTeam
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). இவரது மகன்கள் வெங்கடேசன், முருகேசன் மற்றும் அழகேசன். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் இவர்கள் 3 பேரின் மனைவி மற்றும் குழந்தைகள் டி.ஏந்தலில் அடுத்தடுத்து உள்ள 3 வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் கந்தசாமி மட்டும் தனியாக இருந்தார். இரவு அவர் வீட்டின் வெளியே வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெங்கடேசன் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த வெள்ளிப்பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவரது வீட்டின் அருகே உள்ள முருகேசன் மற்றும் அழகேசன் ஆகியோரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்தார்கள். இதையடுத்து கொள்ளையடித்த பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இன்று காலை 3 வீடுகளின் கதவை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த 3 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆனந்தகுடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் உதயகுமார் (வயது 9).
இவன் கருவேப்பிலங் குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவனுக்கு கடந்த 8-ந் தேதி திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது.
உடனே அவனை பெற்றோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உதயகுமார் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்று உதயகுமார் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.
ஆனந்தகுடி கிராமத்தில் மேலும் பலர் காய்க்கலால் அவதியடைந்துள்ளனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (29), பூமாலை (22), அசலாம்பாள் (50), கருணாநிதி (51), செல்வி (30), ஐஸ்வர்யா (7), பத்ராசலம் (70), மிதுலா (5), கனிமொழி (35), கவுதமன் (13) உள்பட 20 பேர் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒரே கிராமத்தில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
கடலூர்:
சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.
இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.
ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார்.
விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது.
ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ளார்.

தீபாவளி அன்று ஒருநாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படாது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர்கள் சோதனை (ரெய்டு) பயத்தில் உள்ளனர். மக்கள் பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. தமிழக அரசு முடங்கி உள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.3 ஆயிரம் கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்ததை சாதனை படைத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி வரவேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #DMDK #Premalatha #Vijayakanth






