search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two Killed"

    • மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி அருகே செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவரது மனைவி வனிதா.

    இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

    இந்நிலையில் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடைகளை எடுத்து கொண்டு சித்தமல்லி கடை தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளிலில் நின்றிருந்த ஜெயபிரகாஷ் (40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதுகுறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை:

    விராலிமலை அருகே உள்ள மணமேடுபட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் அய்யப்பன் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பரான பொருவாய் கிராமத்தை சேர்ந்த சந்தானம் மகன் மகாமுனியுடன் விராலிமலை அருகிலுள்ள மாதிரிபட்டி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாமுனியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?, அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். #Moscow #ApartmentBuildingFire
    மாஸ்கோ:

    ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில், நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

    இதனால் அங்கு கரும் புகைமண்டலம் உருவானது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அனைவரும், அலறிஅடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இதையடுத்து, தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி இருந்த 4 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.  #Moscow #ApartmentBuildingFire 
    கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த பலத்த மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவரும், மின்சாரம் தாக்கி டிரைவரும் பலியாகினர். #GajaCyclone #Gajastorm
    கடலூர்:

    கஜா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணிக்கு பலத்த மழை கொட்டியது. இந்த விடிய, விடிய பெய்தது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அரவது மனைவி அய்யம்மாள்(32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதனை கவனிக்காமல் ஆனந்த் சாக்கடையை அடைப்பை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அறுந்து தொங்கிக்கொண்டிருந்த வயர் திடீரென்று ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் ஆனந்த் உடலைக் கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்துபோன ஆனந்த்க்கு சுந்தரி(35) என்ற மனைவியும், சார்யா(11) என்ற மகனும், அனுஷ்கா என்ற மகளும் உள்ளனர்.  #GajaCyclone #Gajastorm


    சென்னையில் இன்று தண்டவாளத்தைக் கடந்தபோது மின்சார ரெயில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #TrainAccident
    சென்னை:

    சென்னையில் ரெயில் நிலையங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் யாரும் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்றும் நடைமேம்பாலங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் ரெயில்வே தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் அபாயத்தை உணராமல் சிலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர்.



    இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை-கிண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று தண்டவாளத்தை கடக்க சிலர் முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த ஜூலை மாதம் ரெயிலின் படிக்கட்டில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தின் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #TrainAccident

    கூடுவாஞ்சேரி அருகே பஸ் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident
    செங்கல்பட்டு:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி செல்வி (52).

    இவர்கள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வேலை பார்த்து வரும் மகனை பார்க்க காரில் வந்தனர். உடன் செல்வியின் தங்கை சித்ரா (43), அவரது மகள் தாரணி (17) ஆகியோரும் வந்தனர். காரை டிரைவர் ஜெயகாந்தன் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தாம்பரத்தில் இருந்து குமிழி நோக்கி சென்ற அரசு பஸ் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்துக்குள் செல்ல திரும்பியது.

    அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் திடீரென பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியது.

    காரில் இருந்த பாலகிருஷ்ணன், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். செல்வி, தாரணி, டிரைவர் ஜெயகாந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் செல்வியின் நிலைமை மோசமாக உள்ளது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CarAccident

    திண்டிவனம் அருகே சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    திண்டிவனம்:

    நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆணைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 57). இவரது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    அந்த திருமண பத்திரிகையை சென்னையில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக பீர் முகமது தனது உறவினர்களான அகமது உசேன்(65), அப்துல் ரகுமான்(27) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

    காரை அப்துல் ரகுமான் ஓட்டினார். அந்த கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் அப்துல் ரகுமானின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதுவதுபோல் சென்றது. அந்த பஸ் மீது மோதாமல் இருக்க காரை அப்துல்ரகுமான் வலதுபக்கமாக திருப்பினார். அப்போது அங்கிருந்த சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் அப்துல்ரகுமான் மற்றும் அகமது உசேன் ஆகியோர் காரின் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பீர்முகமது பலத்த காயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த பீர்முகமதை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×