search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serious injuries"

    • திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
    • டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவண பிரபு. இவர் 2 வருடங்களுக்கு மேலாக திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் லட்சுமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் வலது கை உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்தவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடு ரோட்டில் விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் லாரியை வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி அருகே செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவரது மனைவி வனிதா.

    இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

    இந்நிலையில் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடைகளை எடுத்து கொண்டு சித்தமல்லி கடை தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளிலில் நின்றிருந்த ஜெயபிரகாஷ் (40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதுகுறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×