search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Disaster Rescue Team"

    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
    • கள்ளக்கு றிச்சி மாவட்டத்தில் 27 இடங்கள் இயற்கை இடற்பாடுகளின் போது ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

    விழுப்புரம் :

    விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    தமிழகத்தில் கஜா புயலானது 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியது போன்ற மோசமான பேரழிவு என்று தேசிய பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் ராஜன் பாலு தெரிவித்துள்ளார். #GajaCyclone #Tsunami
    சென்னை:

    கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கஜா புயலின் தாக்கம் குறித்து பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் ராஜன் பாலு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

    பதில்:- சென்னை மற்றும் வட மாவட்டங்களை தாக்கிய வர்தா புயல் போன்றுதான் கஜா புயலும். காற்றின் வேகம் வர்தா புயல் போன்றுதான் இருந்தது. வர்தா புயலால் சேதம் குறைவு. ஆனால் கஜா புயலால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கே:- கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உங்கள் குழு சென்றபோது அங்கே கண்ட காட்சி என்ன?

    ப:- கஜா புயலானது 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியது போன்ற மோசமான பேரழிவாகும். சுனாமியால் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். அதுபோல் இப்போதும் கடலோர மாவட்டங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

    கே:- கஜா புயல் கரையை கடப்பதற்கு முன், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் 46 பேர் பலியாகி இருக்கிறார்களே, ஏன்?


    ப:- இதில் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டது. மக்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. புயல் கரையை கடக்கும் இடங்களை தெரிவித்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து விட்டனர். இல்லையெனில் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி 46 பேர் சுவர் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் பலியாகி இருக்கிறார்கள்.

    கே:- இப்போது எத்தனை மீட்பு குழு களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    ப:- தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் 10 பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைத்தோம். இதில் 8 குழு தமிழக மாவட்டங்களிலும் 2 குழு புதுவையிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. நேற்று வரை எங்கள் குழுவினர் முறிந்து விழுந்த 1,629 மரங்களை அப்புறப்படுத்தினர். 123 மின்சார கம்பங்களை நட்டு 189 கி.மீ. தூரத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கே:- இதுபோன்று வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து சேதங்களை தவிர்ப் பது எப்படி?

    ப:- கடலூர், நாகப்பட்டினம் போன்றவை புயல் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகள். எனவே இங்கு மின்சார கேபிள்களை பூமிக்கு அடியில் பதிப்பது தான் சிறந்த வழி. இது சேதங்களையும், மனித உயிரிழப்புகளையும் தவிர்க்கும். மேலும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள மின்சார கம்பங்கள், வயர்கள் போன்றவற்றையும் காய்ந்து போன மரங்களையும் முன் கூட்டி கண்டுபிடித்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Tsunami
    சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #Udhayakumar
    சென்னை:

    சென்னையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் 3, சிதம்பரத்தில் 2, சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

    புயலால் 2559 இடங்கள் பாதிக்கப்பட கூடும் என கண்டறியப்பட்டு உள்ளதால் அங்கு மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி., எந்திரங்கள், மீட்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

    ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #TNMinister #Udhayakumar
    கஜா புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு இன்று காலை கடலூர் வந்தனர். #GajaCyclone #GajaStorm
    கடலூர்:

    கஜா புயல், கடலூர்- பாம்பன் இடையே கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.



    இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து வேன் மூலம் 25 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர்.

    மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

    கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது:-

    அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து நாங்கள் 25 பேர் வந்துள்ளோம். பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவோம்.

    கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளோம். குழு கமாண்டர் நிஷால் தலைமையில் 25 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளோம்.

    படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம். புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #GajaStorm #NationalDisasterRescueTeam



    ×