என் மலர்tooltip icon

    சென்னை

    • பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
    • மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் 'உங்க கனவ சொல்லுங்க' எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாள்.

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உங்கள் கனவை கேட்டு அதனை நிறைவேற்றும் தொடக்க நாள் இன்று.

    * 2030-ம் ஆண்டில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைப்பதற்கான திட்டம்.

    * மக்களின் கனவுகளை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று கேட்டறிவும் வகையில் புதிய திட்டம்.

    * 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.

    * பொருளாதாரத்தில் பிற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் நினைக்கும்போது அவர்களின் முதல் தேர்வு தமிழகம் தான்.

    * விவசாயம், கல்வியிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்.

    * இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், காலைச் சிற்றுண்டி போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

    * மருத்துவ சுற்றுலாவுக்கான மையமாக தமிழ்நாடு மாறி உள்ளது. பல மாநில மக்களும் சிறந்த மருத்துவத்திற்காக தமிழகம் வருகின்றனர்.

    * பிற மாநிலங்களில் தலைநகரங்கள் மட்டுமே வளரும். தமிழ்நாட்டில் மட்டும் தான் பரவலாக வளர்ச்சி.

    * அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

    சென்னை:

    நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் தேவைகளான பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், வருவாய்த்துறை சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அதற்கான பெயர் மாற்றங்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு தீர்க்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான 'நான் முதல்வன்' திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம்கள், தூய் மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்து உள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு திட்டங்களின் பயனாளிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன்மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன் கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஒருங்கிணைக்கும்.

    தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 2 முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

    தன்னார்வலர்கள், 2 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர் பெருமக்களால் அன்றைய தினமே தொடங்கி வைக்கப்படும்.

    • கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
    • இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

    சென்னை:

    'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், த.வெ.க. தலைவரும், 'ஜன நாயகன்' படத்தின் கதாநாயகனுமான விஜய் பேசதாது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

    இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி எம்.பி., ஆளூர் ஷாநவாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.

    இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

    காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

    கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ திமுக அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பாஜக அரசே!" என்று பொங்க மாட்டார்.

    எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.

    பொங்கலோ பொங்கல்! என்று விமர்சித்துள்ளார். 



    • தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது.

    நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி P.T.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.

    இந்தநிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

    மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    • சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் பா.ஜ.க. - அ.தி.மு.க. தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    * பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    * பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

    • செங்கோட்டையனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • செங்கோட்டையன் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640

    5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    8-1-2026- ஒரு கிராம் ரூ.272

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    6-1-2026- ஒரு கிராம் ரூ.271

    5-1-2026- ஒரு கிராம் ரூ.266

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    • சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
    • அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமைச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினர்.

    2 தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    அ.தி.மு.க. உடனான கூட்டணியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை காரணம் காட்டி அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும்.

    இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

    நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை 10.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    திருமுடிவாக்கம்: முருகன் கோவில் வீதி, கோவில் நகரம், மேலந்தை தெரு, பாலவராயன் குளக்கரை தெரு, ராஜராஜேஸ்வரி நகர், ரங்கநாதன் நகர், நல்லேஸ்வரர் நகர், பண்டாரம் தெரு, ஜகநாதபுரம், பூஜா அவென்யூ, பாபு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    • மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
    • சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    சென்னை:

    புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.

    இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.

    அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.

    சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    • அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.
    • இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் 'உங்க கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.

    இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

    ×