என் மலர்
சென்னை
- சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ஜூலை 3-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீடு அருகே உள்ள குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் செயல்பாடு, மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்விகள் கேட்டு பரப்புரை தொடங்கினார். 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.
- பள்ளிக்கல்வித்துறை தான் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் துறையாகும்.
- அரசின் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தெளிந்த நீரோடையைப் போல சீராக ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத்துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அதை செயல்படுத்த அரசு தயாராக இல்லை. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களில் தொடங்கி முதன்மைக் கல்வி அலுவலர் வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 15க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 29 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல மாதங்களாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படாததால் உயர்நிலைப்பள்ளிகளிலும், மாவட்ட அளவிலான கல்வி கட்டமைப்பிலும் நிர்வாகப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
பள்ளிக்கல்வித்துறை தான் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் துறையாகும். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழலில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக கிடந்தால் பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கி விடும்; குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதைத் தான் திராவிட மாடல் அரசு விரும்புகிறதா? என்பது தெரியவில்லை.
அரசின் அனைத்துத் துறையின் செயல்பாடுகளும் தெளிந்த நீரோடையைப் போல சீராக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளிலும் போதிய பணியாளர்கள் தேவை. இல்லாவிட்டால் அரசு நிர்வாகம் தேங்கிய குட்டையைப் போல முடங்கி விடும். எனவே, பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் அனைத்தையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?
பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?
வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
- நேற்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையிலும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து மாத தொடக்க நாளான செவ்வாய்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், நேற்று சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,105 ரூபாய்க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520
01-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
30-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,320
29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-07-2025- ஒரு கிராம் ரூ.120
01-07-2025- ஒரு கிராம் ரூ.120
30-06-2025- ஒரு கிராம் ரூ.119
29-06-2025- ஒரு கிராம் ரூ.119
28-06-2025- ஒரு கிராம் ரூ.119
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- நியூ கடற்கரை ரோடு விரிவு மற்றும் சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
காந்தி நகர் : கேனல் பங்க் ரோடு, காந்தி நகரின் 4-வது மெயின் சாலையின் ஒரு பகுதி, காந்தி நகர் குறுக்கு தெரு, 2-வது கேனல் குறுக்கு தெரு மற்றும் 3-வது கேனல் குறுக்கு தெரு.
கொட்டிவாக்கம்: நியூ கடற்கரை ரோடு, நியூ கடற்கரை ரோடு விரிவு மற்றும் சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மெயின் ரோடு, 7-வது மெயின் ரோடு, 36-வது குறுக்கு தெரு, 58 மற்றும் 59 வது குறுக்குத்தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தம்.
பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் 2-வது மெயின் ரோடு, 16-வது குறுக்கு தெரு முதல் 25-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோடு, CPWD குடியிருப்புகள் (புதியது), 6-வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி.
- மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வரும் டிசம்பர் 27-ந்தேதி வரையில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
- டிசம்பர் 28-ந்தேதி வரையில் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.22624), இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 27-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22623), நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வரும் டிசம்பர் 28-ந்தேதி வரையிலும் கூடுதலாக 3-வது வகுப்பு ஏ.சி. எக்கனாமிக் பெட்டி-3, படுக்கை வசதி பெட்டி-1 என மொத்தம் 4 பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்ததால் மாணவன் நஃபில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இதே பகுதியில் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த நிலையில், மூன்றாவதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 8-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.
- குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) அலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், இன்றையதினம் (2.7.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளருமான பெரியகருப்பன், திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த மரணம் அடைந்த அஜித்குமார் தாயாரிடம் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியினை வழங்கினார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
- 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
- தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
- ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதற்காக, தேர்வர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க டிஎன்பிசி தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியது.
அதன்படி, ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.
சென்னை சாந்தோம், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.
ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை செய்து வருகிறது.
உதகை - கூடலூர் சாலையில் உள்ள சோலூர் சந்திப்பு பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், சென்னை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






