என் மலர்
சென்னை
- மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
- முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை நாளை ரெயில் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.
முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 3-வது நாள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்கிறது. 10 ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
- தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை கட்சியை விட்டு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நீக்கினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகியை நீக்கும் அளவுக்கு சசிகலா - தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஆதரவாளர்கள் அனைவரும் தனது இல்லத்திற்கு வருமாறு சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களை குறிவைத்து சசிகலா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறீர்களா? என ஆதரவாளர்களிடம் சசிகலா கேட்டு வருவதாகவும், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது.
- வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200
08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360
07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360
06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000
05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-02-2026- ஒரு கிராம் ரூ.300
08-02-2026- ஒரு கிராம் ரூ.285
07-02-2026- ஒரு கிராம் ரூ.285
06-02-2026- ஒரு கிராம் ரூ.280
05-02-2026- ஒரு கிராம் ரூ.300
- ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
- முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது.
ரெயில்களில் சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செல்போன் செயலி வருகிற 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று டிக்கெட் எடுக்கவும், வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்தது. தற்போது அனைத்தும் செல்போனில் இருந்தபடி மேற்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நவீன தொழில்நுட்பம் ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரங்கள் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர் யூ.டி.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி வந் தது. பயணம் செய்யும் ரெயில் எந்த ரெயில் நிலையத்தில் உள்ளது. எங்கு வந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்காக என்.டி.இ.எஸ். என்று சொல்லப்படும் தேசிய ரெயில் விசாரணை சேவை இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான புகார்கள் குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் புகார் அளிக்கும் நிலை இருந்தது. தற்போது ரெயில் மதாத் எனப்படும் இணைய தளம், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அந்த சேவையையும் பெற முடியும். இவ்வாறாக பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், குறைகளை பதிவு செய்ய, புகார் தெரிவிக்க, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண டிக்கெட் ஆகிய அனைத்து சேவைகளும் ரெயில் ஒன் என்ற செயலி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ-சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும். படிப்படியாக மேற்கொள்ளப் டும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும்.
ஆர்-வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரெயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரெயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
- சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.
சென்னை:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட் சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில் உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரடடை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.
66 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று நீக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை பதிவுகளை வைத்திருக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.
அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
நங்கநல்லூர்: ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, ஏரிக்கரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர், சிவப்பிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, சோக்காயில்லா தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ராயபுரம்: எம்.சி.ரோடு, கல்லறை சாலை, பி.வி.கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆடம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரா கார்டன், மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி அனைத்து தெருக்கள், கல்மண்டபம் சாலை, வெங்கடேசன் 1 முதல் 4வது தெரு, அம்மன் கோவில் தெரு 1 முதல் 8-வது தெரு வரை, ராஜகோபால் தெலு, பஜனை கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன், நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-27 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி காலை 9.09 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : விசாகம் காலை 9.35 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். குரங்கணி ஸ்ரீமுத்து மாலையம்மன் புறப்பாடு. சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தசரினம், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு. சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-லாபம்
சிம்மம்-நட்பு
கன்னி-உதவி
துலாம்- பெருமை
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- சாதனை
மகரம்-நேர்மை
கும்பம்-உயர்வு
மீனம்-பணிவு
- பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முடிவு எனவும் தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கேசவ விநாயகம் 2015-ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் 28ம் தேதி இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும்.
- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஏஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 22ல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- 14 மற்றும் 15-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
12 மற்றும் 13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14 மற்றும் 15-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை காலை வேளையில் வானம் தெளிவாகவும், அதன் பிறகு ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது.
- 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் மற்றும் எம்.கே. பி நகர் முல்லை நகர் பஸ் நிலையம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டது.
பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 2 பஸ் நிலையங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நவீன பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பிட வசதி, இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பான பயணத்திற்கு மின் விளக்குகள் பஸ் நிலையம் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 2 பஸ் நிலையங்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து பஸ்களும் இன்று முதல் புதிய பஸ் நிலையங்களில் இருந்து சேவையை தொடங்கியுள்ளன.
புதிய பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரையில் நடைபெற்றதால் அங்கிருந்து புறப்பட்ட பஸ்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுத்தது.
குறிப்பாக கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. கடுமையான நெரிசலில் பொதுமக்கள் சிக்கி இருந்த நிலையில் தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளது.
நவீன பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்படுகிறது.
கண்ணதாசன் நகர் பஸ் நிலையத்தில் இருந்து 94 சேவைகள் தினமும் இயக்கப்படுகிறது. கேளம்பாக்கம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.
அதேபோல முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் வெளியே காத்து நிற்காமல் அமர்ந்து பயணத்தை தொடர முடிகிறது.
இந்த 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது. அதனை அப்பகுதி மக்கள் வரவேற்பதோடு அதிகாலையில் பயமில்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் எனவும் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கின்றனர்.






