என் மலர்tooltip icon

    சென்னை

    • விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

    வருகிற 27-ந்தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் விஜயை நேரில் சந்தித்ததாகவும், காஞ்சிபுரத்தில் விஜய் மக்கள் சந்திப்பிற்கு பின்னர் இருவரும் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் என்ன பதவி அளிப்பது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது.
    • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும்.

    சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அப்போது பேசிய அவர்," டிசம்பர் 15ம் தேதி அன்று நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

    தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது" என்றார்.

    மேலும், அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன்.
    • புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!

    வடசென்னை வளர்ச்சிக்கு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவமனைகள், முதல்வர் படைப்பகங்கள், குடியிருப்புகள், புதிய பேருந்து நிலையங்கள் என #வடசென்னை-யின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து நாம் ஆற்றி வரும் பணிகளில் மற்றுமொரு புதிய வரவு மேம்படுத்தப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்!

    1967-இல் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருந்தேன். இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். விரைந்து பணிகளை முடித்த அமைச்சர் சேகர்பாபு, @CMDA_Official-க்குப் பாராட்டுகள்!

    "வடக்கும் தெற்கும் ஒருசேர வளரும் சென்னையின் சீரான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு உறுதிசெய்யும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

    குரூப் 1 முதன்மை தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற வீதத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு.
    • முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

    பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொன்ற பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்கிற்கு வாழ்நாள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குற்றவாளிகள் ஜெகதீஷ், அசோகிற்கு தலா 4 ஆயுள் தண்டனையும், குற்றவாளி ராகேஷிற்கு 5 ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.

    ஜெகதீஷ் மற்றும் அசோகிற்கு தலா ரூ.40,000, ராஷே்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து சென்னை முதன்னை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    மேலும், மூன்று பேருக்கும் மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

    சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.
    • மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.

    திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 294 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

    தொடர்ந்து பல கூட்டங்களில் பேசி வருவதால் தொண்டை கட்டி உள்ளது. மூன்று நாட்களுக்கு பேசக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தாலும் உங்களிடம் பேச வந்துள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினோம்.

    இந்தியாவிலேயே நீர் நிலைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திருவள்ளூர் மாவட்டம் பாலபுரம் ஊராட்சி மத்திய அரசின் விருது வாங்கி உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே திருவள்ளூர் மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு முதல்வர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கலைஞர் ஆட்சியில்தான் ரேசன்கடை திறக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுதேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.

    குடிசை வீடுகளை கான் கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞர் கனவு இல்லம் வாயிலாக ஏராளமானோர் வீடு பெற்று உள்ளனர். மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்ல வீட்டை வழங்கியவர் முதலமைச்சர்.

    மாணவி தான்யாவின் இல்லத்திற்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தவர் முதலமைச்சர். தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி.

    கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் தொகுதிகளில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். தமிழ கத்தில் ஏராளமான திட்டங் கள் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    மகளிர் சுய உதவி குழுக் களை சேர்ந்த பெண்களுக்கு ஐ.டி.கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் 25 கிலோ வரை அரசு பஸ்களில் 100 கிலோ மீட்டர் வரை கட்டணமின்றி எடுத்து செல்லலாம். இதனால் அவர்களின் லாபம் அதிகரிக்கும்.

    டிசம்பர் 15-ந்தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளி ருக்கும் மாதம் 1000 மகளிர் உரிமைத்தொகை வந்து சேரும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பின ருக்குமான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.

    அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குமரி கடல் பகுதியில் உள்ள சுழற்சியால் நமக்கு மழை கிடைக்க அதிக வாய்ப்பு.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 29ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 30ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.

    டிசம்பர் மாதத்தில் எந்த அளவுக்கு மழை இருக்கும் என நவம்பர் 30-ல் அறிக்கை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன.
    • கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.

    அடுத்த 7 நாட்களுக்கான வானிலை ஆறிக்கை குறித்து வானிலை மைய இயக்குநர் அமுதா பேட்டி அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய கடல் பகுதிகளில் மூன்று சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், தமிழகம், கேரள கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து 5 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழை, 76 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

    30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

    பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து காலை புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் பிற்பகல் 12.15 மணி முதல் 3.45 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதன் காரணமாக இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்து சேர வேண்டிய மெமு ரெயில், திண்டிவனத்தில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது.
    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ரசிகர்களுடன் அமர்ந்து இதயக்கனி படத்தை பார்த்தார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் அவர்களின் அரசியல் கிடையாது. அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது" என்றார்.

    கேள்வி:-அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார்சைக்கிள் என்பது இலக்கு. வீட்டுக்கு ஒரு கார் என்பது லட்சியம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளாரே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

    கேள்வி:- என்னை தொட்டவங்களை ஏண்டா தொட்டோம் என்று வருத்தப்படுவார்கள் என விஜய் பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறாரே?

    பதில்:- அது தொட்டவர்களுக்கு தானே வருத்தம். எங்களுக்கு எதுவும் இல்லையே? அவர் தி.மு.க.வை பற்றித்தான் பேசியுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×