என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்கேபி நகர்"

    • முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது.
    • 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் மற்றும் எம்.கே. பி நகர் முல்லை நகர் பஸ் நிலையம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டது.

    பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 2 பஸ் நிலையங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நவீன பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பிட வசதி, இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பாதுகாப்பான பயணத்திற்கு மின் விளக்குகள் பஸ் நிலையம் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த 2 பஸ் நிலையங்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து பஸ்களும் இன்று முதல் புதிய பஸ் நிலையங்களில் இருந்து சேவையை தொடங்கியுள்ளன.

    புதிய பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரையில் நடைபெற்றதால் அங்கிருந்து புறப்பட்ட பஸ்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுத்தது.

    குறிப்பாக கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. கடுமையான நெரிசலில் பொதுமக்கள் சிக்கி இருந்த நிலையில் தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளது.

    நவீன பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்படுகிறது.

    கண்ணதாசன் நகர் பஸ் நிலையத்தில் இருந்து 94 சேவைகள் தினமும் இயக்கப்படுகிறது. கேளம்பாக்கம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.

    அதேபோல முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் வெளியே காத்து நிற்காமல் அமர்ந்து பயணத்தை தொடர முடிகிறது.

    இந்த 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது. அதனை அப்பகுதி மக்கள் வரவேற்பதோடு அதிகாலையில் பயமில்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் எனவும் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கின்றனர்.

    சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பிரபல ரவுடி உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் போலீசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனி 2-வது தெருவைச் சேர்ந்த அசாம் பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

    மேலும் இவர் வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த சாலமோன் என்பவரை ஒரு ஆண்டுக்கு முன்பு சோழவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தங்கள் கிராமத்தில் கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளி ஆவார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எம்.கே.பி.நகர் பகுதியில் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி அருண்பாண்டியன் ஆகியோர் கத்தியுடன் சுற்றித்திரிந்ததாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர். இருவரையும் கத்தியுடன் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவர்கள் குடிபோதையில் இருந்ததால் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது கார்த்திக் மயங்கி விழுந்ததாகவும், அவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் போலீசார் கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையின்போது கார்த்திக் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு நேற்று இரவு 8 மணிக்கு பின்னரே தெரியவந்தது. இதனால் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் போலீஸ் நிலையத்தில் உரிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம், மரணம் அடைந்த கார்த்திக் வீடு ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

    விசாரணை கைதி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது கைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RowdyDeath
    ×