என் மலர்
சென்னை
- வரும் 24-ந்தேதி மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
- மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
- வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:-
பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை.
நேரம்: காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை.
இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:-
மெட்ரோ ரெயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
- 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தேனியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகள், விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே, வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளா-கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
- காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24-ந்தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே உருவாகிறது.
வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா-கர்நாடகா இடையே இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21-ந்தேதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24-ந்தேதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே உருவாகிறது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது.
- அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் பயிற்சிக் கூட்டம்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கழகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டை வளைத்திட முயற்சிக்கும் வஞ்சக சூழ்ச்சி கொண்ட மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில்,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக கழக மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் வரும் 28.10.2025 செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர். சாலையில் உள்ள "கான்ஃப்ளூயன்ஸ் ஹால்" (Confluence Hall)ல் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- த.வெ.க.வினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம்.
சென்னை:
கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு த.வெ.க.வினர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ, கொண்டாடுவதையோ தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் துயரத்தில் பங்கேற்கும் விதமாக த.வெ.க.வினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், த.வெ.க சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
- இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
- தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
* திராவிடம் என்றால் என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
* இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
* தமிழர் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆள்வதற்கும் பாதுகாப்பாக வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டதே திராவிடம்.
* தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெளிவு பெற்று வாக்களிக்காதவரை திராவிட கதைகளை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.
* தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது.
- சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த விற்பனை சூடு பிடித்தது. ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் பட்டாசு விற்பனை கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளனர். இன்று முதல் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
அதுபோல தீபாவளி தினத்தன்று பயன்படுத்தவும், உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவும் இனிப்பு வகைகளை வாங்குவதும் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னையில் இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இன்று இனிப்பு கடைகளில் பார்சல், பார்சலாக இனிப்புகள் விற்பனையானது.
தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இனிப்பு கடைகளில் இருந்து சென்னைக்கு லாரி, லாரியாக இனிப்புகள் கொண்டு வரப்பட்டன. அந்த இனிப்புகளும் இன்று ஒரே நாளில் விற்று தீர்ந்தன.
தீபாவளியை முன்னிட்டு அசைவ பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனையும் அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளிலும் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன் காரணமாக தீபாவளி உற்சாகம் இன்றே மக்கள் மனதில் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் வரை சுமார் 15 லட்சம் பேர் பஸ்கள், ரெயில்கள், தனியார் வாகனங்கள், சொந்த வாகனங்களில் சென்று இருப்பதாக தெரிய வந்து உள்ளது. இதே போன்று தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் இன்று சாலை பயணம் மேற்கொண்டதால் தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் இன்று வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டதை காண முடிந்தது. பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டர்களை கடந்து செல்வதற்கு 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக வந்து புதிய துணிகளை ஆர்வமுடன் வாங்கினார்கள். இதனால் ஜவுளி கடைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ஜவுளி கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டது. இதனால் அந்த பகுதிகளில் நீண்ட நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாடி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் இன்று காலை அலைமோதியது. சென்னை புறநகர் பகுதி மக்கள் மற்ற இடங்களுக்கு ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க படையெடுத்ததால் இன்று இறுதிக்கட்ட விற்பனை அமோகமாக நடந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அலைஅலையாக சென்னைக்குள் திரண்டு வந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது.
பக்கத்து மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்னைக்கு வந்து இருந்தனர். அவர்கள் ஜவுளிகள், இனிப்புகள், பட்டாசுகள், பாத்திரங்கள், நகைகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இதனால் புறநகர் செல்லும் ரெயில்கள், பஸ்கள் நிரம்பி வழிந்தன.
இன்று பிற்பகல் 4 மணிக்கு பிறகு சென்னை நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கடல் அலைபோல் திரளக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை முக்கிய பகுதிகளில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் இன்று மதியம் முதல் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மின்சார ரெயில்கள் நிரம்பி வருகின்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும் போக்குவரத்து போலீசார் இரவு-பகலாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை பட்டாசு மற்றும் இனிப்பு விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ப போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார்.
- தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் "பெரியார் உலக"த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு @AsiriyarKV அவர்களிடம் வழங்கினேன்!

பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்.
- நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும்.
சென்னை:
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக கட்சி பெயரை முடிவு செய்ய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடி அறிமுகம் செய்து விட்டோம். அதில் இடம் பெற்றுள்ள 7 ஸ்டார்களும் 5 திராவிட இயக்க தலைவர்களையும் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர், உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரை குறிக்கும்.
கட்சியின் தொடக்க விழா அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி அடையாறில் நடக்கிறது. அன்றைய தினம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். இந்த நாள்தான் நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த தென்னிந்திய நல உரிமைகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள். (20-11-1916). எனவே இந்த நாளை தேர்வு செய்தோம். அதில் இருந்துதான் திராவிட கட்சிகள் அனைத்தும் தோன்றியது.
நாங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயரில் நிச்சயம் திராவிடம் இருக்கும். திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மேற்கு மத்திய அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் இன்று காலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் தீபாவளி நாளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் லட்சத்தீவு மற்றும் கர்நாடகா, கேரளாவை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
20, 21 ஆகிய தேதிகளில் தெற்கு அரபிக்கடல் அதையொட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியிலும், 22-ந்தேதி அன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய அரபிக்கடல் பகுதியிலும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கர்நாடகா, கோவையை ஒட்டியுள்ள தென் மாவட்ட கடலோர மீனவர்கள் இன்று முதல் 20-ந்தேதி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மேற்கு மத்திய அரபிக்கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இதற்கிடையே வருகிற 24-ந்தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 550 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைவாக இயக்கப்படும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையான வருகிற 20-ந்தேதி தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரெயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
இதேபோல் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வருகிற 20-ந்தேதி ஒரு ஷிப்டு மட்டுமே இயங்கும். அதாவது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






