என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் நினைவுநாள்"

    • சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
    • எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.

    தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

    சமூக நீதியின் முன்னோடி,

    சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

    தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி.
    • திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் நினைவு நாள் இன்று.

    தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,

    தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,

    திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,

    மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!

    தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!

    பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்.
    • ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    ×