என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் - விஜய்
- சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
- எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சமூக நீதியின் முன்னோடி,
சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.
தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






