search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் புதிய வகை டெங்கு காய்ச்சல்: வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. புகார்
    X

    புதுவையில் புதிய வகை டெங்கு காய்ச்சல்: வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. புகார்

    புதுவையில் புதிய வகைடெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று சட்ட சபையில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் பேசியதாவது:-

    புதுவையில் கடந்த வாரம் ஒரு சில நாளில் மழை பெய்தது. மழையை தொடர்ந்து புதுவையில் ஒரு விதமான காய்ச்சல் பரவியது. வீட்டில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

    இந்த புதிய வகை காய்ச்சல் குறித்து விசாரித்த போது, இது மைனர் டெங்கு காய்ச்சல் என்று தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் காய்ச்சலை தடுக்க வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காய்ச்சல் பரவிய போது, நிலவேம்பு கசாயம் குடிக்கும்படி அறிவுறுத்தினார்கள். புதுவை சுகாதாரத்துறை காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்த பின்னர்தான் நடவடிக்கை எடுப்பது என்பது சரியாகாது.

    இது குறித்து இப்போதே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆங்காங்கே மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×