search icon
என் மலர்tooltip icon
    < Back
    Aima
    Aima

    ஐமா

    இயக்குனர்: ராகுல் ஆர் கிருஷ்ணன்
    எடிட்டர்:அருண் ராகவ்
    ஒளிப்பதிவாளர்:விஷ்ணு கண்ணன்
    இசை:கே ஆர் ராகுல்
    வெளியீட்டு தேதி:2023-09-22
    Points:65

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை236225
    Point3827
    கரு

    ஒரு அறையில் மாட்டிக்கொண்ட இரண்டு நபர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் யூனஸ் தன் தாயின் உடல் நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதே மருத்துவமனையில் நாயகி எல்வின் ஜூலியட் விபத்தில் சிக்கி அனுமதிக்கப்படுகிறார். அப்போது வில்லன் சண்முகம் ராமசாமி, யூனஸையும் எல்வினையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கிறார். இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயல்கின்றனர்.

    இறுதியில் இருவரையும் சண்முகம் ராமசாமி ஏன் கடத்தினான்? அவரின் திட்டம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார். நடிப்பில் இயக்குனர் சொன்னதைச் செய்துள்ளார்.

    கதாநாயகி எல்வின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத்தோற்றம் திருப்தியாக உள்ளது.

    வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.

    இயக்கம்

    ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராகுல் ஆர்.கிருஷ்ணா. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது. யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சி செல்லும் போது திடீரென்று வில்லன் என்ட்ரி, அடியாட்கள் என்ட்ரி எல்லாம் சஸ்பென்சை நீர்த்துப் போகச் செய்கிறது. காட்சிகளில் இன்னும் கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

    இசை

    கே.ஆர்.ராகுல் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    விஷ்ணு கண்ணன் குறுகிய அறையில் காட்சிகளை சுழன்று படமாக்கியிருக்கிறார்.

    படத்தொகுப்பு

    அருண் ராகவ் திருப்திகரமான படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.

    காஸ்டியூம்

    ஹரினி, அசோக், வினு லாவண்யா காஸ்டியூம் டிசைன் பரவாயில்லை.

    புரொடக்‌ஷன்

    தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் ‘ஐமா’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×