என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது
    • சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.

    உத்தரகாண்டில் பருவ நிலை சரியில்லாத நேரங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பக்தர்கள் பலியானர்கள்.

    கடந்த 7-ந் தேதி கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த ஹெலிகாப்டர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதால் 5 பக்தர்கள் உயிர் தப்பினார்கள்.

    இந்த நிலையில் உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குப்தகாசிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் இருந்தனர்.

    கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் விமானி திணறினார்.

    சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.

    சம்பவ இடத்துக்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்று உடல்களை மீட்டனர்.

    • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது.
    • இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.

    உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இந்த மாதம் 3-ந்தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது. இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. அதில் விமானி (5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை) உட்பட ஆறு பயணிகள் இருந்தனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
    • வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

    இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குழு ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.

    வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுமியின் தாயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் ஒருவர் தனது காதலனும் அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.

    சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

    பட்வாலின் கூட்டாளியான சுபம்  மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.

    ஜூன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறியதைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.

    அனாமிகா முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் அவரது பெயர் எழுந்தவுடன், அவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஹரித்வார், ஆக்ரா மற்றும் பிருந்தாவனில் சிறுமி பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    சிறுமியின் தயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், சிறுமியின் தந்தையை யாரிடமாவது இதை வெளிப்படுத்தினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    அனாமிகா தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது காதலனுடன் அவரது ஹோட்டலில் வசித்து வந்தார். அதே நேரத்தில் அவரது மகள் தனது தந்தையுடன் வசித்து வந்தார். 

    • விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .
    • ஹலிகாப்டருக்குள் பயணித்த 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . ஹலிகாப்டருக்குள் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மலைப்பிரதேசங்களில் நோயாளிகளை மீட்பதற்காக சஞ்சீவினி என்ற ஹெலிகாப்டர் சேவையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் கங்கநானி அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.

    • சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காளை மாடு ஓட்டி சென்றது.
    • காளை மாடு ஸ்கூட்டரை பல மீட்டர் தூரம் இழுத்துச்சென்று தப்பி ஓடியது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை காளை மாடு ஒன்று ஓட்டி செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    உள்ளூர் சந்தை பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரில் காளை மாட்டின் கொம்பு மாட்டிக்கொண்டதையடுத்து காளை மாடு ஸ்கூட்டரை பல மீட்டர் தூரம் இழுத்துச்சென்று தப்பி ஓடியது.

    காளை மாடு ஸ்கூட்டரை ஓட்டி செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    • உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
    • குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.

    கோடை காலத்தில் மட்டுமே 4 கோவில்களும் திறக்கப்படும். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப். 30-ந்தேதி 'சார்தாம்' யாத்திரை தொடங்கியது. நேற்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கேதார்நாத் கோவில் நடை இன்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியின்போது இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸின் இசைக்குழு பக்தி பாடல்களை இசைத்தது.

    கேதார்நாத் கோவிலில் திறக்கப்பட்டதையடுத்து தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

    • உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்து கொண்டுருந்தார்.
    • அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை.

    உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரமோத் பிஞ்சோலா. உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை தெருவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.

    அந்த வீடியோவில் பிரமோத் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்து அருகில் உள்ள பலகையில் அமர்கிறார். சற்று நேரத்தில் அவர் பலகையில் இருந்து சரிந்து விழுகிறார்.

    அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.

    அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ஏப்ரல் 15 ஆம் தேதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் தனது குடும்பத்தினரும் உத்தரகாண்டில் உள்ள உத்தரகாஷிக்குச் சென்றிருந்தார். மணிகர்ணிகா காட் அருகே கங்கை நதியில் இறங்கி அப்பெண் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது கங்கை நதியில் அப்பெண் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

    அந்த ரீல்ஸ் வீடியோவில், "அப்பெண் அடித்து செல்லப்படுகையில், அவரின் குழந்தை தனது தாயை, 'அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவது" பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவத்தை அடுத்து அப்பெண்ணின் உடலை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அப்பெண்ணின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

    • இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.

    உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படவேண்டும் என்று மகாராஷ்டிராவில் கலவரம் வெடித்தது.
    • அவுரங்கசீப்பூர் என்ற இடத்தின் பெயர் சிவாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    இந்த 11 இடங்களுக்கு இந்து தெய்வங்கள், சின்னங்கள், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

    அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படவேண்டும் என்று மகாராஷ்டிராவில் கலவரம் வெடித்த நிலையில், ஹரித்வாரில் உள்ள அவுரங்கசீப்பூர் என்ற இடத்தின் பெயரை சிவாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது.

    உத்தர்காண்டில் மாற்றப்பட்டுள்ள இடங்களின் பெயர்கள்

    1. அவுரங்கசீப்பூர் - சிவாஜி நகர்

    2. கஜிவாலி - ஆர்யா நகர்

    3. சந்த்பூர் - ஜோதிபா புலே நகர்

    4. முகமதுபூர் ஜாட் - மோகன்பூர் ஜாட்

    5. கான்பூர் - ஸ்ரீ கிருஷ்ணாபூர்

    6. கான்பூர் குர்சாலி - அம்பேத்கர் நகர்

    7. இத்ரிஷ்பூர் - நந்த்பூர்

    8. அக்பர்பூர் ஃபஜல்பூர் - விஜய்நகர்

    9. அப்துல்லாபூர் - தக்ஷ்நகர்

    10. பஞ்சக்கி-ஐடிஐ மார்க் - குரு கோல்வால்கர் மார்க்

    11. சுல்தான்பூர் பட்டி - கௌசல்யாபுரி

    ×