என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்டில் கனமழை: நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
    X

    உத்தரகாண்டில் கனமழை: நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயம் தேசிய அளவில் புகழ்பெற்றது. குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த கோவில் மே முதல் நவம்பர் வரை திறந்திருக்கும். இந்த காலத்தில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவில் அமைந்துள்ள ருத்ரபிரயாக் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் சன்பிரயாக் நகரின் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் முன்கதியா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது. கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சன்பிரயாக் நகருக்கு அழைத்து வந்தனர்.

    Next Story
    ×