என் மலர்
உத்தரகாண்ட்
- அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
- தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தீபக் சைனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிவபெருமான் வேடமணிந்ததிருந்தபோது பிடிபட்டார்.
தீபக் சைனி தன்னை பாபாவாகவும் சிவ பாக்தராகவும் காட்டிக்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளை தன்வசம் ஈர்த்துள்ளார்.
அவ்வாறு, ஒரு சிறுமியின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மலை கிராமம் தராலி. ஆன்மிகத் தலமாக கருதப்படும் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தராலி கிராமம் அமைந்துள்ளது.
எனவே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இதற்காக இங்கு ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.
தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
மலையில் இருந்து ஆர்ப்பரித்து வந்த வெள்ளம், தராலியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், வீடுகளை வாரிச்சுருட்டிச் சென்றது. ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். 4 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்துக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ-திபெத் படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பலியானவர்களில் ஒருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. அவரது பெயர் ஆகாஷ் பன்வார் (வயது 35) என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 50 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஹர்சில் ராணுவ முகாமில் இருந்த 11 ராணுவ வீரர்களும், கேரள சுற்றுலா பயணிகள் 28 பேரும் அடங்குவார்கள். அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு டி.ஐ.ஜி. மொஹ்சென் ஷாஹேதி கூறியதாவது:-
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இருப்பினும் மாற்று வழியை யோசித்து வருகிறோம்.
மீட்பு பணிக்காக டேராடூனில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன, ஆனால் மோசமான வானிலையால் அவர்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை, நிலச்சரிவு, பெருவெள்ளம் ஆகியன மீட்பு பணிக்கு தடைகளாகவும், சவாலாகவும் உள்ளன. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்னானியில் லிமாச்சா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலம் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தாராலி மற்றும் ஹர்சிலில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதியை ஹெலிகாப்டரில் சென்றவாறு பார்வையிட்டார். பின்னர் காயமடைந்த ராணு வீரர்கள் மற்றும் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம். அனைவரையும் மீட்கும் முயற்சி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, உத்தரகாசியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகினர்.
இந்நிலையில், மேக்வெடிப்பு ஏற்பட்ட தாராலி பகுதியில் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று ஆய்வு மேற்கொண்டு, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
மேலும் அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
- பெருவெள்ளத்தில் தராலியில் இருந்த 25 ஓட்டல்கள், ஏராளமான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தராலி என்ற மலைக்கிராமம் உள்ளது. முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் தராலி கிராமத்தில் ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அங்கு அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
வானில் இருந்து அருவி கொட்டுவததைபோல் பெய்த மழை காரணமாக கீர் கங்கா ஆற்றில் பேரழிவு தரும் பெருவெள்ளம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த பெருவெள்ளம், தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்தது.
மலைப்பகுதிகளில் இருந்து வந்த பெருவெள்ளம், அங்கிருந்த கட்டிடங்களை வாரிச்சுருட்டியபடி ஓடியது. திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கில் 4 பேர் பலியானார்கள், பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கரைபுரண்டு ஓடிய பெருவெள்ளத்தில் தராலியில் இருந்த 25 ஓட்டல்கள், ஏராளமான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ரிஷிகேஷி பிரமாண்ட சிவன் சிலையை சூழ்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 36 வினாடிகள் ஓடும் வீடியோவில் ஆர்ப்பரித்து வரும் வெள்ளம் 340.50 ரிங்கிட் மீட்டர் அபாய அளவை எட்டியுள்ளதை பார்க்கும் பயனர் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதனால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் சுகி என்ற இடத்திலும் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளை அடித்துச்சென்றது. இதிலும் பலர் மாயமானார்கள்.
இந்நிலையில், உத்தரகாசியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹர்சில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியானது.
பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.
- சம்பவ இடம் சென்ற மீட்புக்குழு தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
- சுகி டாப் பகுதியில் மீண்டும் ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சுகி டாப் பகுதியில் மீண்டும் ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.
- இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார்.
- உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது.
அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அன்று இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து அசாமில் சில்சார் விமான நிலையம் செல்வதாக திட்டம்.
ஆனால் இண்டிகோ விமானத்தில் கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.
அகமது உடல்நிலை சரியில்லாத நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்கள் அகமதுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார்.
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர். கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சில்கார் விமான நிலையம் வர வேண்டிய அகமது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில்கார் விமான நிலையத்தின் அகமதுவின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர் அவர் வரவில்லை என்றும் செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
- 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் புகழ் பெற்ற மாதா மன்சா தேவி அம்மன் ஆலயம் உள்ளது. இது வடஇந்தியாவில் உள்ள மிக முக்கியமான 7 அம்மன் ஆலயங்களில் ஒன்றாகும்.
நவராத்திரி நாட்களில் இந்த ஆலயத்தில் லட்சக்கணக்கான பெண்கள் வந்து வழிபடுவது உண்டு. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது ஆடி மாதம் என்பதால் மாதா மன்சா தேவி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஆலய வளாகத்தில் திரண்டு இருந்தனர்.
அப்போது கூட்டத்தில் ஒரு பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த திடீர் குழப்பத்தால் நிலைகுலைந்த பக்தர்கள் குழப்பத்தில் தவிப்புக்குள்ளானதால் அந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் இருந்து வெளியேறி பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு ஓடினார்கள். இதனால் ஏராளமான பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்ற பக்தர்கள் ஓடினார்கள்.
கடும் நெரிசல், கூச்சல் காரணமாக சில பக்தர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் மீதும் மற்ற பக்தர்கள் மிதித்தபடி ஓடினார்கள். இதனால் 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்துக்குள்ளே உயிரிழந்தனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் கோவில் வளாகத்துக்கு விரைந்து சென்றனர். பக்தர்களை அமைதிப்படுத்தி நெரிசலை சீர்படுத்தினார்கள்.
அதன் பிறகு 6 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயம் அடைந்த பக்தர்களும் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதா மன்சா தேவி அம்மன் கோவிலில் திடீர் நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பது நீண்ட நேரம் தெரியாமல் இருந்தது. தீவிர விசாரணையில் பக்தர் ஒருவர் மீது அந்த பகுதியில் இருந்த மின் கம்பி பட்டு அந்த நபர் அலறி உள்ளார்.
மின்சாரம் தாக்குவதாக பக்தர்கள் அலறவே மற்ற பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடி இருக்கிறார்கள். இதனால்தான் பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம், பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்.
- வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்
உத்தரகாண்டில் உள்ள 7,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யை ஆம்மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் மானவர்கள் தினமும் ராமாயணம் மற்றும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், "மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம் மற்றும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும். வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை கூற சொல்வது கொடுமையானது என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- அவர்கள் அனைவரும் போக்தா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உத்தரகாண்ட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.
இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) மாலை, பித்தோராகர் மாவட்டத்தில் முவானி கிராமத்திலிருந்து போக்தா கிராமத்திற்கு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 150 அடி ஆழமான பள்ளத்தில் கழிவந்தது.
இதில் பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் போக்தா பகுதியைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த மூன்று பயணிகள் தற்போது முவானியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயம் தேசிய அளவில் புகழ்பெற்றது. குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும் இந்த கோவில் மே முதல் நவம்பர் வரை திறந்திருக்கும். இந்த காலத்தில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவில் அமைந்துள்ள ருத்ரபிரயாக் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் சன்பிரயாக் நகரின் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் முன்கதியா பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது. கவுரிகுண்ட் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பல பக்தர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மாநில பேரிடர் மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சன்பிரயாக் நகருக்கு அழைத்து வந்தனர்.






