என் மலர்
இந்தியா

VIDEO: ரிஷிகேஷில் பிரமாண்ட சிவன் சிலையை சூழ்ந்து கொண்ட கங்கை நதி
- பெருவெள்ளத்தில் தராலியில் இருந்த 25 ஓட்டல்கள், ஏராளமான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தராலி என்ற மலைக்கிராமம் உள்ளது. முக்கிய ஆன்மிக தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் தராலி கிராமத்தில் ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அங்கு அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
வானில் இருந்து அருவி கொட்டுவததைபோல் பெய்த மழை காரணமாக கீர் கங்கா ஆற்றில் பேரழிவு தரும் பெருவெள்ளம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட இந்த பெருவெள்ளம், தராலி மலைக்கிராமத்துக்குள் புகுந்தது.
மலைப்பகுதிகளில் இருந்து வந்த பெருவெள்ளம், அங்கிருந்த கட்டிடங்களை வாரிச்சுருட்டியபடி ஓடியது. திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கில் 4 பேர் பலியானார்கள், பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கரைபுரண்டு ஓடிய பெருவெள்ளத்தில் தராலியில் இருந்த 25 ஓட்டல்கள், ஏராளமான வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ரிஷிகேஷி பிரமாண்ட சிவன் சிலையை சூழ்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 36 வினாடிகள் ஓடும் வீடியோவில் ஆர்ப்பரித்து வரும் வெள்ளம் 340.50 ரிங்கிட் மீட்டர் அபாய அளவை எட்டியுள்ளதை பார்க்கும் பயனர் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.






