என் மலர்
தெலுங்கானா
- எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
- காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான 'என் கன் வென்ஷன் சென்டர்' என்ற மண்டபம் உள்ளது. அந்த மண்டபம்தும்மிடிகுண்டா ஏரிக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஐதராபாத்தில்கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபமும் இடிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த நாகார்ஜுனா, 'மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைப்படி பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குல இடம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை' என்றும், தெரிவித்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பங்கேற்ற, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-
தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். மக்கள் நலனுக்கு எதிரானது.
கிருஷ்ணரின் போதனைப்படி நடக்கும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை, மக்கள் நலனுக்காக மேற்கொண்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
- இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்
ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் பிரபலங்களின் இல்லத் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் தற்போது இடித்துள்ளனர். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பதற்கு கண்டம் தெரிவித்து நாகார்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது கருத்தரங்கு கட்டடத்தை தீர்ப்பு வரும் வரை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக தற்போது இடித்துள்ளார்கள். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை.
தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். நீதிமன்றத்தில் என் மீது தவறெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன். தற்போது அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
- நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்துள்ளார்.
- விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு.
தெலுங்கானாவில் தெருநாயை ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ரீத்தி தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். பின்பு நாய் இறந்த பிறகு, உடலை பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
- யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடினர்.
- சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்த யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.
யூடியூபர் பறக்கவிட்ட பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விடுகிறார். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ வைரலானதை அடுத்து ஹர்ஷா மீது வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
- இந்த கன்வென்ஷன் சென்டர் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
- இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் இன்று காலை முதல் அதனை இடிக்க துவங்கியுள்ளனர்.
இந்த கட்டடம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கரில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நெரெடி கும்மாவை சேர்ந்தவர் அஸ்வினி. நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக தேவார கொண்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் நல்கொண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் நிகிதா மற்றும் செவிலியர்கள் அஸ்வினியை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் ஆகும் என தெரிவித்தனர்.
30 நிமிடங்களுக்கு பிறகு அஸ்வினியை நடை பயிற்சி செய்யுமாறு தெரிவித்தனர். அப்போது அஸ்வினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
நாற்காலியில் உட்கார்ந்த அஸ்வினிக்கு குழந்தை பிறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த செவிலியர்கள் அஸ்வினியை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் கால தாமதம் செய்து பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர் நிகிதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, சைதம்மா, மவுனிகா, சரிதா ஆகியோர் சஸ்பெண்டு செய்து கலெக்டர் நாராயண ரெட்டி உத்தரவிட்டார்.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
- ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வசந்த இந்திராவிடம் கொடுத்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடா துணை வணிகவரித்துறை அதிகாரியாக இருந்தவர் வசந்த இந்திரா.
இவர் தனி நபரிடம் அவரது நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் உள்ள முரண்பாடுகளை கவனிக்காமல் இருப்பதற்காக ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
நேற்று மாலை வணிகவரித்துறை அலுவலகத்திற்குச் சென்ற நபர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வசந்த இந்திராவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வசந்த இந்திராவை கையும், களவுமாக கைது செய்தனர்.
பின்னர் வசந்த இந்திராவை ஐதராபாத், நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கியதாக துணை வணிகவரித்துறை பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் பைக்கில் பயணம் செய்தபடி பணத்தை தூக்கி எறிவதை காணலாம்.
- சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பரபரப்பான குகட்பல்லி பகுதியில் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டதற்கு யூடியூபரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் யூடியூபர் பவர் ஹர்ஷா என்ற மகாதேவ் பைக்கில் பயணம் செய்தபடி பணத்தை தூக்கி எறிவதை காணலாம்.
மற்றொரு வீடியோவில், அவர் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விட்டதை காணலாம். இதனால் சிதறிய நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர். சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் எடுக்க முயன்றவர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடும் போக்குவரத்து நெரிசல், திடீரென ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். யூடியூபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதள பயனாளர்கள் சைபராபாத் காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
- 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
- சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.
வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பர்தா அணிந்த நபர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்தபடி ஒருவர் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர். அதில் பர்தா அணிந்த நபர் பைக்கை ஓட்டுகிறார். பர்தா அணிந்தவர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை சுற்றி உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பர்தா அணிந்து பைக் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பைக்கின் பின்னர் உட்கார்ந்து வந்த இளைஞர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது.
- வனத்துறையினர் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், மத்தே வாடா அடர்ந்த வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது. மெல்ல திறந்தது கதவு சினிமாவில் வருவதுபோல இந்த புதைகுழி உள்ளது.

புதைகுழிக்குள் சிக்கி யாரும் பலியாக கூடாது என்பதற்காக புதை குழியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைத்து இருந்தனர். மேலும் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் வாரங்கல் மாவட்டம், அல்லோடுவை சேர்ந்த நரேஷ் (வயது 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்கு வந்தார். புதைக்குழியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி சென்றார். அப்போது நரேஷ் புதைக்குழிக்குள் விழுந்தார்.
மார்பு வரை அவரது உடல் புதைந்த அதிர்ஷ்டவசமாக முழுவதும் மூழ்கவில்லை.
புதைக்குழி உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் செல்வது இல்லை. புதை குழிக்குள் சிக்கிய நரேஷ் 2 நாட்களாக உயிருக்கு போராடியபடி கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.
ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயில் டிராலி டிரைவர் ஒருவர் வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வாலிபர் கூச்சலிடுவதை கேட்டார். அவர் சென்று பார்த்தபோது வாலிபர் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மத்தே வாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாததால் கயிறு கட்டி புதைக்குழி இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு மூலம் புதைக் குழியில் இருந்து நரேஷை மீட்டனர்.
மீட்கப்பட்ட நரேஷ் மயக்க நிலையில் இருந்ததால் அவரை மத்தே வாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாரங்கலை சேர்ந்த வாலிபர் எதற்காக மத்தே வாடா வந்தார். தற்கொலை செய்து கொள்ள புதைக்குழியில் இறங்கினாரா என நரேஷுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்திலேயே செவிலியர் பிரசவம் பார்த்தார்.
- செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துநர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.
பிரசவத்திற்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கமாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.






