என் மலர்
இந்தியா
தெலுங்கானா அரசுப் பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் இலவச பஸ் பாஸ்
- கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்திலேயே செவிலியர் பிரசவம் பார்த்தார்.
- செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துநர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.
பிரசவத்திற்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கமாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.