என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அக்கரை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.சாலை வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம், கோவளம் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். கோவளத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம் வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையை அடைந்து சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அக்கரை சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி திருவான்மியூர் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படி தாம்பரம் மாநகர போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல் தாம்பரம் மாநகர போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது.
- ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது. அதன் பின்னர், காற்று சுழற்சியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ததால், வெப்பம் ஓரளவுக்கு தணிந்து காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் கடந்த 9-ந்தேதி நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து காணப்பட்டது. இது மேலும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதியால் பெரிய அளவுக்கு மழை இல்லை என்றாலும், சில இடங்களில் மழை பதிவானது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் அதிகாலையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.
ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது.
- ரெயிலில் மேற்கூரையில் பயணம் செய்தது எந்த கல்லூரி மாணவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை:
சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களுக்குமுன்பு, வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
அந்த வீடியோவில், கல்லூரி மாணவர்கள் சிலர் மின்சார ரெயிலின் மேற்கூரை மீது ஏறியும், பக்கவாட்டில் தொங்கியவாறும் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்தது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானது.
வீடியோ குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து, எப்போது நடந்தது? எந்த வழித்தடத்தில் நடந்தது? ரெயிலில் மேற்கூரையில் பயணம் செய்தது எந்த கல்லூரி மாணவர்கள்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டை- சென்னை கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்த வீடியோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவு செய்தது தெரிய வந்தது. மேலும், அந்த வீடியோவில் உள்ளவர்கள் தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வீடியோவில் இருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை இன்று ரெயில்வே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.
- மாவட்டங்களின் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2-வது ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து, மாநில கட்சிகளுக்கு இணையாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சியின் நிர்வாக பணிகளுக்காக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
- கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும்.
ராமநாதபுரம்:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
- ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
- 19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
முருகன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் முருகன் மற்றும் அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- பிரேமலதா விஜயகாந்த், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல அமித்ஷா, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு "ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
- மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
- முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்
முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.
மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும்.
அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
- அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்அமித்ஷா தங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
அதனை தொடர்ந்து, இன்று நண்பகல் 12 மணிக்கு அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து முக்கிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன.
- எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது
சென்னை:
நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி டாக்டர்கள் மற்றும் ஆயுஷ் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் டாக்டர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ டாக்டர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு டாக்டர்கள் இருக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.
மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.
அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.






