என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையை குளிர்வித்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
    X

    சென்னையை குளிர்வித்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

    • கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) இறுதியில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த மாதம் இறுதியில் சில இடங்களில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவானதை பார்க்க முடிந்தது. அதன் பின்னர், காற்று சுழற்சியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ததால், வெப்பம் ஓரளவுக்கு தணிந்து காணப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் கடந்த 9-ந்தேதி நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து காணப்பட்டது. இது மேலும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வுப்பகுதியால் பெரிய அளவுக்கு மழை இல்லை என்றாலும், சில இடங்களில் மழை பதிவானது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னையில் அதிகாலையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.

    திருவொற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    ஒரு மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×