என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழப்பு.
- லாக்-அப் டெத் மரணம் என வழக்குப்பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகிய தந்தை மற்றும் மகனை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் இருவரையும் கொடுமையான முறையில் தாக்கியது தெரியவந்தது. இருவரும் லாக்-அப் மரணம் அடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தான் அப்ரூவராக மாற அனுமதித்தால் காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மையையும் கூறுவதாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோன்று கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம்.
- அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அரங்கத்தில் மாற்றுக்கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் விவசாய சங்க அமைப்பினர், தென்னை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆய்வு செய்து அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். குறுவை, சம்பா சாகுபடி தொகுப்பு கொடுத்தோம்.
உழவன் செயலியை அறிமுகப்படுத்தினோம். அதில் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கினோம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினோம். அதுபோல் மீன்பிடித் தடைக்கால நிவாரணமும் அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தி வழங்கப்படும்.
தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் செய்து தரப்படும்.
கஜா புயலால் தென்னை விவசாயம் பட்டுக்கோட்டை, போராவூரணி பகுதியில் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை பாதுகாத்தோம். கஜா புயலின் போது சேதமான படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கினோம்.
எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உங்கள் அனைவரது கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் வீடு இல்லாத மீனவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2013ஆம் ஆண்டு ஐ.ஓ.பி. வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு.
- சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது.
2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 30 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
- மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலையில் 2-ம் ஆண்டு B.E.லெதர் டெக்னாலஜி படித்து வரும் சபரீசன் (19) என்ற மாணவர் இன்று காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
- மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* நாளை மறுநாள் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* 27-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 27-ந்தேதி வரை அதிகபட்சமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- இதய துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது.
- இதய சிகிச்சை மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
முதலமைச்சர் அவர்களுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன்பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளைமறுநாள் அவர் வீடு திரும்புகிறார் என்று தெரிவித்தார்.
- டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி.
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய் (6) என்ற மகனும் கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவரான விஜய்க்கு தெரியவர அவர் கண்டித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து இதற்கு தடையாக உள்ள கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தனது 2 குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக விஜய் உயிர் தப்பினார். இருப்பினும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அப்போது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற அபிராமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் அறிவிப்பதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
- நூலகத்தை பராமரிப்பதற்கு என 46 பணியிடங்கள் உள்ள நிலையில், 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
- தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமையானது.
மதுரை:
சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 ஆயிரம் கையெழுத்து பிரதிகளும், 4503 அரிய புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன. இந்த நூலகத்தை பராமரிப்பதற்கு என 46 பணியிடங்கள் உள்ள நிலையில், 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இது போன்ற நூலகங்களை வரலாற்று சிறப்புடன் பாதுகாப்பது அரசின் கடமை.
நூலகத்தின் இயக்குனர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. 2014-ம் ஆண்டு மத்திய அரசு மத்திய நூலகங்களுக்கான பணிகள் எனும் பெயரில் இதுபோல பழமையான நூலகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தையும் தேசிய நூலகங்களுக்கான பணிகள் திட்டத்தின் கீழ் மாதிரி நூலகமாக வகைப்படுத்தி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆகவே தேசிய நூலகங்களுக்கான பணிகளின் திட்டத்தின் கீழ் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை 'மாதிரி நூலகமாக" அறிவித்து அதன் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமையானது. ஆகவே அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
- பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சில மணி நேரங்கள் உள்வாங்கி காணப்படுவதும், பின்னர் இயல்பு நிலை திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இன்று அமாவாசை என்பதால் கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது. பச்சை நிறத்தில் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளித்த பாறைகளை பக்தர்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
- தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
- கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலோடு ஒட்டு கேட்பு கருவியை ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், கட்சியும் நான்தான், தலைவரும் நான்தான். பா.ம.க.வில் கௌரவ தலைவராக ஜிகே.மணி, செயல் தலைவராக அன்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு யாராவது 'நான் தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
எனது இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்கள் யார் என எனக்குத் தெரியும். விசாரணை பாதிக்கப்பட கூடாது என்பதால் அதனை பற்றி தெரிவிக்கவில்லை என்றார்.






