என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    • ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். நேற்று அக்னி தீர்த்த கடல், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய அவர் கோவிலில் ராமநாதசுவாமி-பர்வ தவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    முன்னதாக ராமேசுவரம் வருகை தந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் தூய்மைபணி மேற்கொண்டார்.

    இதில், மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, மாவட்டத்தலைவர் தரணி ஆர்.முருகேசன், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், தமிழ் இலக்கிய மாவட்ட தலைவர் ஆறுமுக லிங்கம், ராணுவ பிரிவு மாவட்டத்த லைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.

    • சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
    • சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

    சென்னை:

    சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இதை தமிழகத்தின் புத்தக திருவிழா என்று சொல்வார்கள்.

    சென்னை மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இந்த காட்சிக்கு வந்து பயன் பெறுவது உண்டு.

    இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. தொடக்கத்திலேயே மழையால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டன. புத்தகக்காட்சிக்கு ஒருநாள் விடுமுறை நிலை ஏற்பட்டது.

    அதன் பிறகு மழை இல்லாததால் தொடர்ந்து மிக சிறப்பாக புத்தகக்காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதுபோல இந்த ஆண்டும் புத்தகக் காட்சி சமயத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் புதிதாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக நாவல்கள், கதைகள்தான் முன்பெல்லாம் அதிகமாக விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு புத்தகக்காட்சி இரவு புத்தகக்காட்சி நிறைவு பெறுகிறது. அதன் பிறகுதான் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பது தெரியவரும்.

    கடைசி நாள் என்பதால் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை முடிந்தவரை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளன. பெரும்பாலான பதிப்பக உரிமையாளர்கள் கூடுதல் தள்ளுபடி விலைக்கு புத்தகங்களை இன்று விற்பனை செய்தனர்.

    நேற்று முதல் குறைந்த விலைக்கு அதிக புத்தகங்கள் கிடைத்ததால் வாசகர்கள், எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில பதிப்பகங்களில் நாவல்கள் 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆங்கில நாவல் விற்பனை செய்யப்படும் இடங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வெளியிலும் சாலையோரத்திலும் ஏராளமானவர்கள் பழைய புத்தகங்கள் விற்பனை செய்தனர். அந்த புத்தகங்களை வாங்கவும் வாசகர்கள் அதிகளவு ஆர்வம் காட்டினார்கள்.

    4 நாவல்கள் ரூ.250 என்று கடந்த வாரம் விற்பனையானது. இன்று 4 நாவல்கள் 100 ரூபாய்க்கும் கீழ் வழங்கப்பட்டது. சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

    நேற்றும் இன்றும் மாணவர்கள் வருகை அதிகளவு காணப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    புத்தகக் காட்சி வளாகத்தில் உணவு கூடங்கள், இலக்கிய நிகழ்ச்சி அரங்குகள் இருந்தாலும் முதியவர்களுக்கு ஓய்வு எடுக்க சரியான வசதி செய்யப்படவில்லை. அரங்குகளுக்கு செல்லும்போது தள அமைப்பு பல இடங்களில் தடுமாற வைத்தது. அதுபோல கழிவறை பிரச்சனையும் காணப்பட்டது.

    இந்த குறைகளும் இல்லாமல் இருந்து இருந்தால் புத்தகக்காட்சி இனிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்து இருக்கும்.

    • மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
    • சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.15 மணி அளவில் கொடியேற்று நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலுக்கு வந்தனர். உதயநிதி ஸ்டாலின் திறந்த ஜீப்பில் வெள்ளை நிற இளைஞர் அணியின் டி-சர்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவரை பார்த்ததும் கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள், இளம் தலைவர் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் மாநாடு திடலுக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பட்டன. திராவிட நாயகன், கழக தலைவர், அண்ணன் தளபதி என்ற கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், இளைஞர் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் தலைமையில் அனைத்து துணை செயலாளர்களும் பங்கேற்றனர்.

    மாநாட்டுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகள், மற்ற தொண்டர்கள் தூரத்தில் நின்றபடி கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மாநாட்டு கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வெல்லட்டும் வெல்லட்டும் தி.மு.க. வெல்லட்டும், வாழ்க வாழ்கவே தளபதி வாழ்கவே என வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். வாழ்த்து கோஷங்கள் விண்ணை பிளந்தது.

    இதையடுத்து தி.மு.க. கொடி கம்பம் அருகில் முன்னாள் நிறுவப்பட்டிருந்த தலைவர்கள் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

    மாநாட்டையொட்டி திடல் முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். மாநாட்டில் கடைகள் போடப்பட்டு இருந்தது. இந்த கடைகளில் தலைவர்களின் புகைப்படங்கள் விற்பனையானது. சேலம் மாநகரில் இருந்து மாநாட்டு திடல் வரையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர். வாழ்த்து பேனரில் தளபதி, சின்னவர், மாமன்னன், இளம் தலைவர் வருக... வருக... என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாநாட்டில் பெத்தநாயக்கன்பாளையம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் வாழை மரக்கன்றுகள் நடப்பட்டு, கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.

    • மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.
    • வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களை அடுக்குமாடி நிறுத்துமிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க விமான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    விமான நிலைய காா் பாா்க்கிங் பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனா். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும்.

    தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன்.
    • நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம்.

    சென்னை:

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.-ல்.) உள்ள பெண் கமாண்டோ படையினர் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 'பெண்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி குஜராத் மாநிலத்தை சென்றடைந்தது.

    பேரணியில் சென்ற பெண் கமாண்டோ படையினர் பல்வேறு சாகசங்களை குஜராத்தில் செய்து காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பெண் கமாண்டோக்கள் சிறப்பாகவும், திறமையாகவும் சாகசங்களை செய்தனர்.

    இதையடுத்து வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. தேர்வான 9 பேரில் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஜான்சி மனோகரன் என்பவரும் ஒருவர்.

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன். பெண் கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் திறமையாக சாகசங்களை செய்து காட்டியதால், குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.

    மொத்தம் 60 பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதில், நான் உள்பட 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா, கலைவாணி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக்காட்ட உள்ளேன்.

    இதற்காக நாங்கள் 3 பேரும் தினமும் கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26-ந்தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர்கள் முன்பு எங்களது சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை பெற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
    • சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.

    தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
    • பிரதமரின் வருகையொட்டி 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு.

    ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தனுஷ் கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடி உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி செல்லாமல் ஊர் திரும்புவதில்லை.

    தனுஷ்கோடிக்கு எளிதாக சென்று வரும் வகையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது. 

    அதாவது, இலங்கையை ஆண்ட ராவணன் சீதா தேவியை சிறைபிடித்து சென்றபோது, அவரை மீட்க ராமர் முதலில் தனுஷ்கோடி வந்தார். முன்னதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதரிடம் வில், அம்பு பெற்றார் என்றும் பின்னர் அரிச்சல்முனையில் இருந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும் ராமாயண காவியம் கூறுகிறது.

    மேலும், அந்த பகுதியில் ராமர் மணலால் சிவனை உருவாக்கி வழிபட்டார். அதேபோல் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்த பின்னர் இதே அரிச்சல்முனையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை நடத்தியுள்ளார்.

    எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீரை தெளித்து செல்வது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் வருகை தரும் பிரதமர் மோடி நாளை காலை தான் தங்கியிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை செல்கிறார்.

    அங்கு கடலின் அழகை ரசிப்பதோடு, கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவ லிங்க பூஜையில் கலந்து கொள்கிறார். 

    பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்கிறார். இலங்கையை ஆண்ட ராவணின் தம்பியான விபீஷணன் ராமபிரான் மீது கொண்ட பற்று காரணமாக அண்ணனுக்கு எதிராக போரிட்டார்.

    இறுதியில் ராவணன் இறக்கவே அவரது தம்பியான விபீஷணனை ராமர் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அது நடந்த இடம் இந்த கோதண்டராமர் கோவில் என்பதால் ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த கோவிலில் பிரதமர் மோடி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.

    பிரதமர் கடற்கரை பகுதிக்கு வருவதையொட்டி இந்திய கடலோர காவல் படை, கடற்படையினர் உள்பட 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.
    • டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி (நாளை) மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் கடந்த 18ம் தேதி அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று மாலை ஒப்படைத்தனர்.

    பிறகு, மாநாட்டு சுடரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    மேலும், இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.

    இதில், டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    ட்ரோன் வாயிலாக வானில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உதயசூரியன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் ஒளிர்ந்தன. 

    • திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.
    • சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர்.

    ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.

    இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஷ்வரம் வந்தடைந்தார்.

    அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுகிலும் தொண்டர்கள் மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.

    சாலை மார்க்கமாக பிரதமர் மோடி ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றனர். அங்கு சற்று இளைப்பாறிவிட்டு அங்கிருந்து கிழக்கு வாசல் வழியாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு, கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார். 

    பிறகு, பிரதமர் மோடி, ருத்ராட்ச மாலைகள் அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமருக்கு தீபாராதனை மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டது. மேலும், அங்கு பிரதமருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 3 அடுக்கு பாடுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.
    • மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைகிருத்திகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) திருப்போரூர், கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்போரூர் கந்தசாமி கோவில் சார்பில் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபத்தை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கோவில் அலுவலகத்திற்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முடிவுறும் நிலை யிலும், ரூ.6.65 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும் நிலையிலும், ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு இறை பசியோடும், வயிற்றுப் பசியோடும் வருபவர்களின் இரண்டு பசியையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 கோவில்களில் செயல்படுத்தப்படட முழு நேர அன்னதானத் திட்டம் 8 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு, இந்தாண்டு மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    அதேபோல ஒருவேளை அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாண்டு மேலும் 7 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகின்றனர்.

    இதற்கான ஆண்டு ஒன்றிற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கோவில்களின் அன்ன தானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதிபடுத்தி ஒன்றிய அரசின் தரச்சான்றிதழ்களை இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் பெற்று உள்ளது.

    பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் நாளொன்றுக்கு 10,000 நபர்கள் வீதம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும், பழனி கோவில் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது. வடலூர் வள்ளலார் கோவிலில் ஒரு நாளைக்கு 10,000 சன்மார்க்க அன்பர்கள் என 3 நாட்களுக்கு 30,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 நபர்க ளுக்கும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமை தோறும் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி பல்வேறு நல திட்டங்களால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைத்து தருகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,225 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 1,316 ஆக இந்த எண்ணிக்கை உயரும். அதே போல் நில மீட்பை பொறுத்த அளவில் ரூ. 5,508 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கின்றோம்.

    தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருக பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ. 599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் ஆக மொத்தம் முருகன் கோவில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தாண்டு முதல் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு கட்ட ணமில்லாமல் அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணம் வரும் 28-ந்தேதியும், ராமேஸ் வரம் – காசி ஆன்மிகப் பய ணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் 5 கட்டங்களாகவும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்து சமய அறநிலைத் துறையானது இப்படி பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

    பாம்பன் சுவாமிகளின் மயூர வாகன சேவனத்தின் 100 ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி, அவரது வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டும், 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்தும் சிறப்பு செய்தோம். ஆனால் இன்று சிலர் சுத்தமாக இருக்கின்ற கோவில்களையே சுத்தப்படுத்துவது போல மீடியா பப்ளிசிட்டிக்காக செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    அதற்கு கவர்னர் துணை நின்று, சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டு இருக்கின்றார். ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தும் தூய்மையாக தான் பராமரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை அவர்களை அழைத்து தலைமைச் செய லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன். துறையினுடைய செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திலும் சுமார் 8 முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றோம். மனது ஒத்துப் போனால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி. கே.சேகர்பாபு கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளின் போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் எம்.தேவராஜ், கோவில் செயல் அலுவலர் கே.குமர வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

    தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×