என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
சென்னை :
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.
- லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
- என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர்.
சீமானை கண்டதும் அவரின் தோளில் கைபோட்டு நடந்துவந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ சீமானை புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான்.
* லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் மான உணர்ச்சியை ஊட்டியவர் சீமான்.
* நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன்.
* என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார்.
* இனி எங்கள் பயணம் தொடரும் என்று வைகோ கூறினார்.
ம.தி.மு.க.வினரும், நா.த.க.வினரும் மோதி வந்த நிலையில் இருவரும் இணக்கமாக பேட்டி அளித்து, இனி பயணம் தொடரும் என்று தெரிவித்தனர்.
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்தார்
- செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பழனிசாமி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார்
இதைதொடர்ந்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
பின்னர், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பயணம் செய்தனர்
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு இருவரும் ஒன்றாக வந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன.
- சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடும் குளிரை போக்க 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கோடியக்கரை பகுதிகளில் மழை பெய்து மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.
குறிப்பாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன. மேலும் கோடியக்கரையில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.
மேலும் கொசு உள்ளான், பட்டாணி உப்புக்கொத்தி, மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், பூநாரை, செங்கால் நாரை, கரண்டி மூக்கன், வெண்கொக்கு, நீர் காகம், மீசை ஆலா, பருத்த அலகு ஆலா, ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
- நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
- பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* நாட்டின் விடுதலைக்காக தன்னையே ஒப்படைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
* அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சியளித்தவர் என அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர்.
* பசும்பொன்னில் முத்துராமலிங்கருக்கு மணிமண்டபம் அமைத்து புகழ் சேர்த்தவர் கலைஞர்.
* 2007-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞர் ஆட்சியில் கொண்டாடப்பட்டது.
* பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
- நிறுத்தி வைக்கப்பட்ட நெல் கொள்முதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் எதுவும் இல்லை.
- நல்லாட்சிக்கான எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்காத திமுக அரசு, உழவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நடைபெற்று வரும் குளறுபடிகளால் அங்குள்ள விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 33 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், அதனால் நெல் கொள்முதல் நிலையங்களின் முன் உழவர்கள் இரவும், பகலும் காத்துக்கிடக்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உழவர்களுக்கு திமுக அரசு மீண்டும், மீண்டும் துரோகம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களைப் போலவே காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நடப்பாண்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதை கொள்முதல் செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும் கூட, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களைக் கூறி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் கடந்த 33 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உழவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுடன் இரவு பகலாக கொள்முதல் நிலையங்கள் முன் காத்திருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிறுத்தி வைக்கப்பட்ட நெல் கொள்முதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் எதுவும் இல்லை. இன்று , நாளை என அதிகாரிகள் உழவர்களை அலைக்கழித்து வரும் நிலையில், இடையிடையே பெய்து வரும் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும் ஆட்சியாளர்களின் மனம் இரங்கவில்லை; நெல் கொள்முதல் தொடங்கவில்லை.
33 நாள்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதும், எப்போது நெல் கொள்முதல் தொடங்கும் என்பதே தெரியாமல் உழவர்கள் காத்துக்கிடப்பதும் சகித்துக்கொள்ள முடியாத கொடுமைகள் ஆகும். உலகின் மிக மோசமான அரசுகள் என்று விமர்சிக்கப்பட்ட நாடுகளின் நிர்வாகங்கள் கூட, உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களுக்கு இத்தகைய கொடுமைகளை இழைத்ததில்லை. ஆனால், நல்லாட்சிக்கான எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்காத திமுக அரசு, உழவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தென்காசியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நெல் கொள்முதல் சிறப்பாக நடைபெறுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருப்பதாகவும், நெல் கொள்முதல் குறித்து தினமும் தாம் ஆய்வு செய்வதாகவும் கூறியிருந்தார். தினமும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சருக்கு வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது எப்படி தெரியாமல் போனது? ஒருவேளை இந்த பகுதிகள் தமிழகத்திற்கு அப்பால் இருப்பதாக முதலமைச்சர் நினைத்து விட்டாரோ?
அதிகாரத்தின் திமிரில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்கள் உணவு படைக்கும் கடவுள்களை மதிக்க மறுக்கின்றனர். அதனால் தான் தமிழ்நாட்டின் உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் பிரச்சனையை அதிகாரத்தின் உச்சியில் இருந்து அலட்சியமாகப் பார்ப்பதை விடுத்து, உழவர்களில் ஒருவராக இருந்து பார்க்க வேண்டும். 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.
- தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
விழாவில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
- நேற்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 சரிந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து காணப்பட்டது.
கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த சூழலில், மேலும் விலை குறையும் என நேற்று எதிர்பார்த்த பலருக்கு தங்கம் விலை அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.
தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.
காலையில் கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 325-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170






