என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
- நாங்கள் பாஜக அணியில் இருந்தபோதுகூட பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 3 ஆண்டாக தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் இருந்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது.
தமிழ் தமிழ் என மூச்சுக்கு 300 முறை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.
கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அரசு சார்பில் முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக உள்ளது.
கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் தி.மு.க-பா.ஜ.க. உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?
டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.
நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோதுகூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என தெரிவித்தார்.
- சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி.
- கலெக்டர் அலுவலகங்களில் விண்ணபிக்க பெண்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் சுமார் 1½ கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் சிலரது விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் விண்ணபிக்க பெண்கள் குவிந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் இது தவறான தகவல் என தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்து சில இடங்களில் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முதலில் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்கள் செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடும்போது 1½ கோடி பெண்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 1 கோடியே 18 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் வரும் காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு முதல்-அமைச்சர் உரிய முடிவு அறிவிப்பார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் செய்தி போலியான தகவல். வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார்.
சென்னை:
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். மாலையில் நடைபெற உள்ள விழாவில் கலைஞர் நாணயத்தை வெளியிட உள்ளார்.
- விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார்.
- கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தம்பி விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில் தான் பார்க்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். அதை அப்போது பேசுவோம். எனவே அதுபற்றி இப்போது பேசி பயனில்லை.
திருச்சி போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. என்னையும், என் குடும்பத்தாரையும், எனது கட்சியில் உள்ள பெண்களையும், தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். வருண்குமார், அவரது ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை.
- குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.
வருகிற ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறக்க உள்ளார்.
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பயன்பாட்டில் உள்ளது .
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது மத்திய மந்திரி நட்டா இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது. அம்மா மருந்தகம் என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள்.
ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது, அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்க வில்லை, ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை.
அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக மருத்துவமனைகளை வைத்தார்கள்.
அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கி யது போலவும், நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் மூடி விட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார்.
தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும், இந்த திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி.
- செப்டம்பர் 1-ந்தேதி பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும் செப்டம்பர் 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் வீரவணக்க நிகழ்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் வருவார்கள்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் 18-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 21-ந்தேதி காலை 10 மணி வரைக்கும், 30-ந்தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 10 மணிவரை ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்தநாளில் அனைவரும் கூட்டமாக செல்லாமல், 4 பேர் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- தேவநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவன மோசடி வழக்கில் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தேவநாதனை வருகிற 28 ஆம் தேதி வரை (14 நாட்கள்) சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தேவநாதனுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவி போலீசார் சோதனை செய்தனர். மியிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகம் உள்பட 12 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 4 லட்சம் பணம், இரண்டு கார்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்ப்டடு இருக்கிறது.
- மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.
- வசந்த் & கோ நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வசந்த் & கோ நிறுவனம் சார்பில் 10 , 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி, கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
- கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார்.
- முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முழங்குளி முத்தமிழ் ஆர்ட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இதில் வெற்றிபெற்ற கபடி வீரர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. பரிசு வழங்கி கவுரவித்தார்.
- யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ்.
- 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் பஷீலத்துல்ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த வீட்டின் மாத வாடகை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் ரூபாய் என அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர்ராஜா கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூபாய் 18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தவில்லை என தெரிகிறது.
இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து, மொத்த வாடகை தொகை யான 18 லட்சம் ரூபாயில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் சங்கர்ராஜா வழங்கினார்.
மீதமுள்ள 6 லட்சம் ரூபாய், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான 15 லட்சம் ரூபாய் என மொத் தம் 20 லட்சத்திற்கும் மேல் வரை வாடகை பணத்தை கொடுக்கவில்லை.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் ஆன்லைன் வாயிலாக யுவன் சங்கர் ராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.
வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- சாரல் திருவிழா களைகட்டி உள்ளது.
- குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவி,சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வரும் நிலையில், சாரல் திருவிழாவும் நடைபெறுவதால் விழா களைகட்டி உள்ளது.
சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவி. மெயின் அருவி.
பழைய குற்றால அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று காலையில் பெண்களுக்கான கோலப் போட்டியும் ஆண்களுக்கான ஆணழகன் போட்டியும் நடை பெற்றது.

மாலையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






