என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அம்பத்தூர் எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை
- நசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பத்தூர்: எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், எஸ் மற்றும் பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி பேஸ் 1 மற்றும் 2, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பி.கே.எம். தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோவில் தெரு, செட்டி மெயின் தெரு.
செம்பரம்பாக்கம்:
நசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல்.
செங்குன்றம்:
பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர்.
- கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
- தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.
நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-
நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.
யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
- இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில், 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.
இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை புதுப்பித்து வருகின்றனர்.
இதுவரை நாடு முழுவதும் 100 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரத்து 413 பேர் மட்டுமே ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர் என்றும், 40 கோடியே 7 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் ஆதார் எண்ணை புதுப்பிக்கவில்லை என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 14-ந் தேதி வரை கட்டணமின்றி ஆதாரை புதுப்பிக்க ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அதற்குள் ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு பின்பு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி தான் ஆதாரை புதுப்பிக்க முடியும் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆதார் சேவை மைய நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'ஆதார் சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆதாரை புதுப்பிக்கும்போது கருவிழி, விரல்ரேகை போன்றவற்றையும் சேர்த்து புதுப்பிக்கப்படும். தற்போது வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகள் விரல்ரேகை மற்றும் கருவிழி மூலமே ஆதார் உறுதி செய்யப்படுகிறது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தரிசன டிக்கெட்டுகள் கருவிழி மூலம் ஆதாரை உறுதி செய்து தான் வழங்கப்படுகிறது. விரல் ரேகை, கருவிழியை புதுப்பித்து கொள்வதன் மூலம் தேவையான இடங்களில் ஆதார் அட்டையை உறுதி செய்வதற்கான தடைகள் எதுவும் இருக்காது. ஆதாரை புதுப்பிக்காதபட்சத்தில் கைரேகை, கருவிழி போன்றவை 'மேட்ச்' ஆவதற்கு சிரமப்படும்' என்றார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது.
- சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியன் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைதாகியுள்ளார்.
இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பென் பவுலிங் சாம்பியன் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
- முதல் அரையிறுதி இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது.
3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் சாம்பியன் தொடர், சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி டென்பின் பவுலிங் விளையாட்டு தளத்தில் நடைபெற்றது.
இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் நடந்த இறுதிப் போட்டியில், கணேஷ் - தீபக் இடையிலான போட்டி பரபரப்பான முறையில் நடைபெற்றது. முதல் ஆட்டத்திற்குப் பிறகு 2 பின்களின் மெல்லிய விளிம்பில், 2 வது போட்டியில் கணேஷ் 6 புள்ளிகள் மூலம் தீபக்கை வீழ்த்தினார். இறுதியில் தீபக் 4 பின்கள் என்ற குறுகிய புள்ளிகள் (420-416) வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
முன்னதாக முதல் அரையிறுதி இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடப்பட்டது. இதில், முதல் நிலை வீரரான தீபாக் கோத்தாரி இரண்டு போட்டிகளில் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பெய்க்கை (405-372) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
33 பின்களின் பின்ஃபால் வித்தியாசத்தில் நாக் அவுட் முறையில் இரண்டாவது அரையிறுதியில், இரண்டாம் நிலை வீரரான கணேஷ். என்.டி, மூன்றாம் நிலை வீரரான பார்த்திபன்.ஜெ அவர்களை (441-416) 25 பின்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி , இறுதிப் போட்டிகான தனது இடத்தை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தகக்து.
- காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி போன்ற பொறுப்பின் தலைவராக வேண்டுமென விஜய் விருப்பம் தெரிவித்தார்.
- ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட்டு வேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது.
தந்தி டிவிக்கு பாஜக உறுப்பினர் விஜயதாரணி பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசில் கிடைத்த பொறுப்புகளை துறந்து பாஜகவில் இணைந்தேன். எம்எல்ஏ, தேசிய பொதுச்செயலாளர், முதன்மை கொறடா பொறுப்புகளை துறந்தேன்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருக்கும் என சொல்லப்பட்டது.
ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட்டு வேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது.
ஆனாலும் மன வருத்தம் இன்றி பொன். ராதாகிருஷ்ணனுக்காக தேர்தலில் பணியாற்றினேன். தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றினேன்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பு கேட்டேன்.
பாஜகவில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. எனக்கும் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.
ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் பொழுது காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி போன்ற பொறுப்பின் தலைவராக வேண்டுமென விஜய் விருப்பம் தெரிவித்தார்.
அப்போது, நீங்கள் தமிழகத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நடிகராக இருக்கும் நிலையில் தனி கட்சி துவங்கினால் தனி ஆட்சி செய்யலாம் என்று ராகுல் காந்தி விஜயிடம் கூறினார். ராகுல் காந்தி கூறியதன் பிரதிபலிப்பாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்.
நான் ஏற்கனவே காங்கிரஸில் இருந்ததால் இதுப்பற்றி எனக்கு முன்னதாகவே தெரியும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை என விஜயதரணி ஆதங்கம்
- விஜயதரணியின் இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதரணி, "நான் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுக்காலம் பதவி இருந்தும், இருக்கின்ற பதவியையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை, எதிர்பார்ப்போடுதான் வந்துள்ளேன்.
தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க என தெரியும். என்னை போன்றவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். என்ன அண்ணே சரிதானே? என அண்ணாமலையைப் பார்த்து விஜயதரணி கேட்டார்.
விஜயதரணியின் இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு காரணமே ராகுல்காந்தி தான் என்று புதிய தகவல் ஒன்றை விஜயதரணி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், "நடிகர் விஜய், ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டார். உங்கள் செல்வாக்கிற்கு தனிக் கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி யோசனை கொடுத்தார். அதன் விளைவாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியுடன் அவர் இணக்கமாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார். யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை பொறுத்து இங்கு அரசியல் மாற்றங்கள் நிகழும்" என்று தெரிவித்தார்.
- திமுக ஒருங்கிணைப்பு குழு திமுக சார்பு அணிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
- சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட திமுக ஒருங்கிணைப்பு குழு திமுக சார்பு அணிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
அதன்படி, திமுக ஆதிதிராவிடர் நல குழு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகளுடன் ஒருங்கிணைபஅபு குழு ஆலோசனை நடத்துகிறது.
மேலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
முன்னதாக, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்தார்.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் என அப்போது குறிப்பிடப்பட்டது.
- ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
- அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:-
அண்ணாமலை மனநல மருத்துவரை உடனடியாக சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். எனவே, நாங்கள் மனநல மருத்துவத்தை பற்றி அறிந்திருக்கிறோம். உங்களக்கு மதுரையிலேயே கூட ஒரு பைசா கட்டணம் இல்லாமல் சேர்த்துவிட்டு அந்த புண்ணியத்தை ஏற்றுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களை உங்களின் பைத்தியக்காரதனத்தில் இருந்து மீட்டெடுத்து உதவுகின்ற வகையில் அதை செயவதற்கு நாங்கள் முன்வருகிறோம்.
பாரதிய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த கட்சியுடைய விலாசத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஆக்டோபஸ் அரைவேக்காடு அட்டைப்பூச்சி அண்ணாமலை தன்னுடைய முகவரியை, விலாசத்தை முன்னிலைப்படுத்தி, சுயநலத்தோடு எடுத்து வரும் அத்தனை முயற்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுகளவும் உழைப்பை தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை போன்ற பைத்தியங்கள் பகல்கனவு கானும் இந்த காலத்தையும் நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.
- எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு. இந்த சம்பவம் காரணமாக கும்பகோணத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே அண்ணாமலையின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதோடு எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்தனர்.

முன்னதாக தமிழக பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை பேசும் போது, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயி மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்தது. அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கண்டித்து அதிமுக சார்பில் எச்சரிகை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஒட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து தான் அதிமுக தொண்டர்கள் சிலர் அவரது உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.
- போலீசார் முத்தையனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
- முத்தையனின் மடிகணினியை போலீசார் சோதனை செய்தனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் உள்ளது.
சேலம் போயர் தெருவை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வார். அது மட்டு
மில்லாமல் பில்லி, சூனியம் எடுப்பது, பெண்களை வசீகரம் செய்வது உள்ளிட்ட வேலைகளையும் சாமியார் வேடம் அணிந்து முத்தையன் செய்வார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிரைவருக்கும், முத்தையனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது டிரைவருக்கு பணம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையனிடம் டிரைவர் கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் டிரைவரின் குடும்பத்தினருடன் முத்தையனுக்கு பழக்கம் அதிகமானது. அந்த பழக்கத்தால் நாளடைவில் டிரைவரின் மனைவிக்கும், முத்தையனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இந்த விஷயம் டிரைவருக்கு தெரியவரவே 2 பேரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மேல் முத்தையனுடன் பழக்கம் வைத்திருந்தால் நம் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் என கருதிய டிரைவர், சாமியார் முத்தையனுக்கு தரவேண்டிய பணத்தை வட்டியுடன் தயார் செய்து கொடுத்து விட்டு தனது நிலத்தை திரும்ப தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தையன், உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் நான் ஆபாசமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார் முத்தையனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முத்தையனின் மடிகணினியை போலீசார் சோதனை செய்தனர். அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப், 5 பென்டிரைவ் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முத்தையனை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
- ஈபிஎஸ்-ன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக உள்ள தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீத நிதியை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன் எம்.பி., எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஈபிஎஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக வருகிறது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்காக ஆஜராகிறார்.






