என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
- டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
வானிலை சீராகாத நிலையில் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக,தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- இவரது பதவிக்காலம் சமீபத்தில் தான் நீட்டிக்கப்பட்டது.
- இவர் இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். இவரது பதவிக்காலம் சமீபத்தில் தான் நீட்டிக்கப்பட்டது. இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக உள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இந்தியாவின் பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும், ஜி 20 இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மீஞ்சூர்: மீஞ்சூர் டவுன், டி.எச். ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையன்மேடு.
தேனாம்பேட்டை: போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு. டி.டி.கே. சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே. ரோடு, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். ரோடு பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி & முரேஸ் கேட் சாலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு எச்சரிக்கை.
- திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் மழை பெய்து வருகிறது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக,
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த (தீவிர) காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றிரவு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஓரிடு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும்.
- கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை தொடர்பான கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) வழங்கும் சலுகை மறுநிதியளிப்பு, மாநிலத்தில் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த குறுகிய கால கடன் அளவிற்கேற்ப உயர்த்தி வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் வருமான வரி TDS பிடித்தங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மூலம் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்கள் நியாயமான வட்டி விகிதத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி.-யிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும். வித்யா லட்சுமி, சூர்யாகர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் திட்டங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்க தகுதியான வங்கிகளின் பட்டியலில், கூட்டுறவு வங்கிகள் சேர்க்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
23 கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பைச் சீரமைக்க இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட சுமார் ரூ.124 கோடி முன்மொழிவு சாதகமாக பரிசீலிக்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கடன்களை சொந்த நிதியிலிரூந்து வழங்கும் வங்கிகளுக்கு 1.5% குறைக்கப்பட்ட வட்டி மானியத்தில் இருந்து 2% ஆக இந்திய அரசால் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
கிசான் கிரெடிட் கார்டு - கால்நடை பராமரிப்பு கடன்களுக்கான தனி மறுநிதிஉதவி வசதியினை விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி பிரத்யேகமாக வழங்க வேண்டும். இணையவழி வங்கியியல் (Net Banking Services) சேவைகள் உரிமம் கூட்டுறவு வங்கிகளுக்கும் விரைந்து வழங்கப்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த சந்திப்பின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என்.சுப்பையன் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
- அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசு திறந்த புத்தகம்; நாங்கள் தவறு செய்யவில்லை என்று முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டு எந்த இறப்பும் நேரவில்லை. எங்கு இறப்பு ஏற்பட்டாலும் அரசை குறை கூறுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மர்ம கும்பல் நண்பர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முத்துகிருஷ்ணனை படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து இவரது மகன் முத்துகிருஷ்ணன் 21 வயது வாலிபரான இவர் அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழி அருகே நண்பர்களுடன் மாலையில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நண்பர்களை அங்கிருந்து விரட்டி விட்டு முத்துகிருஷ்ணனை முகம் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை:
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்று மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் தெரிந்தது. குளிர்ச்சி குறைந்தது அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னை எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், கிண்டி, மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
- முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.
சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 940 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு- வடமேற்கில் நகர்ந்து இலங்கை, தமிழக கடலோரப் பகுதியில் அடுத்த இரண்டு தினங்களில் நிலக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.
- வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிப்பு.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியால் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






