சென்னைக்கு 940 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.
சென்னைக்கு 940 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

மணிக்கு 18 கிமீ வேகத்தில் திரிகோணமலைக்கு தெற்கு- தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.

சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 940 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு- வடமேற்கில் நகர்ந்து இலங்கை, தமிழக கடலோரப் பகுதியில் அடுத்த இரண்டு தினங்களில் நிலக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com