என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்டசபையில் இதற்கு முன்பு 10-வது இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
- அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் இதற்கு முன்பு 10-வது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சரான நிலையில் 3-வது இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்பட்டார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
- கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வது குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மதுரை நகரப்பகுதிகளில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிகள் எப்போது முடியும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்தாண்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பாதாள சாக்கடை பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை புறநகரில் ரூ.2,000 கோடி, மாநகர பகுதியில் ரூ.1,500 கோடியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடைபெறுகிறது.
வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து மதுரை பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
- இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதித்தி ருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் இன்று முதல் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் அரிசி கடை வீதி, பழைய மார்க்கெட் வீதி , புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரிகள் கருப்புக்கொடி ஏற்றி உள்ளனர். அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவையின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது.
வருகிற 18-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
- உய்யக்கொண்டான் வாய்க்காலில் 2 சிறிய தடுப்பணை கோரிய எம்.எல்.ஏ. பழனி பாண்டிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்
- தென்பெண்ணையாற்று உபரிநீர் மலட்டாற்றில் திறந்துவிடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சோமரசம்பேட்டை அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் 2 சிறிய தடுப்பணை கோரிய எம்.எல்.ஏ. பழனி பாண்டிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது. வேண்டுமெனில் கால்வாய் சீரமைத்து தரப்படும் என்று கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சிலாற்றில் தடுப்பணை கட்டப்படுமா என கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
தற்போது வரும் மழையில் அணையே தாங்காத நிலையில் தடுப்பணை தேவையா?.
2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
தென்பெண்ணையாற்று உபரிநீர் மலட்டாற்றில் திறந்துவிடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கரையை பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணிகள் நடைபெறுகின்றன.
50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவையிருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம் என்று அவர் கூறினார்.
- எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
- மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாக பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து மகா தீப மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மகாதீப தரிசனத்திற்காக ஆண்டு தோறும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழு மூலமாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
மகா தீப மலையில் ஈரப்பதம் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
வழக்கம்போல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப கொப்பரை, நெய், காடா துணி சுமார் 30 கிலோ கற்பூரம் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இதற்கு கோவில் ஊழியர்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை.
இது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பக்தர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து சென்றனர்.
- பஞ்ச ரதங்கள் பவனி நாளை நடைபெற உள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின்
6-ம் நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகர் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் மாட வீதியில் உலா வந்தனர்.
பக்தர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து சென்றனர். இதில் சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு மேல் 5-ம் பிரகாரத்தில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
6 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டியம் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி தேரில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நாளை நடைபெற உள்ளது.
அப்போது பக்தர்களின் பாதுகாக்கவும், தேர்பவனியின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
மேலும் குற்ற செயல்களை கண்காணிக்க மாட வீதிகளிலும், கிரிவலம் பாதையிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர் செல்லும் அசலியம்மன் கோவில் தெரு, பேகோபுரம் 3-வது தெரு, பேகோபுரம் பிரதான சாலை, கொசமடை வீதிகளில் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தேர் திரும்பும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.
தேர் மீது சில்லறை காசுகள், தண்ணீர் பாட்டில், தானியங்கள் உள்ளிட்டவை வீசக்கூடாது. பக்தர்கள் 4 கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப் பாதையிலோ கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 2-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், 4-ந்தேதி விலை மாற்றமின்றியும், 5-ந்தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும், 6-ந்தேதி சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.56,920-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்கத்தில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. வெள்ளி விலை கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
07-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
06-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
05-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
04-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-12-2024- ஒரு கிராம் ரூ. 100
07-12-2024- ஒரு கிராம் ரூ. 100
06-12-2024- ஒரு கிராம் ரூ. 100
05-12-2024- ஒரு கிராம் ரூ. 101
04-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டம்.
- சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் இயக்க திட்டமிட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை நாடுகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 10-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள், கப்பலை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கைக்கு கூடுதலாக ஒரு கப்பல் இயக்க வேண்டும் என இந்தியா, இலங்கை நாட்டு வர்த்தகர்களிடையே கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த சிவகங்கை கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம், அவர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதல் சுமார் 250 நபர்கள் பயணிக்கும் வகையில் மேலும் ஒரு புதிய கப்பலை நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது.
இத்தகவலை நாகையில் நடந்த நாட்டிலஸ் ஷிப்பிங் கருத்தரங்க கூட்டத்தில் சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
அப்போது கடல்சார் துறையில் உள்ள வேலைவாய்ப்பு பணிகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் அதற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து, மாலுமிகள், என்ஜினீயர்கள், பயனாளர்கள் மத்தியில் நாட்டிலஸ் ஷிப்பிங் நிறுவன கேப்டன், ஆர்.கே.சிங் மற்றும் சுபம் கப்பல் நிறுவன பொறுப்பாளர் கீதா ராஜராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும், கடல்சார் கல்வி மற்றும் பயிற்சியை முடித்த உள்ளூர் கடலோடிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக கப்பல்களில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
- மறைந்த மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது.
கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகமது கனி, ஜெயராமன், தங்கவேல்ராஜ், கணேசன், ரமேஷ், சண்முகம், சுந்தரம், புருஷோத்தமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன், தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி செல்வம், சம்பந்தன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மறைந்த மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
- பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
- பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்குக் கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஹரி என்கிற அறிவழகனை ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
- 2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்க முற்பட்டதால் ரவுடி ஹரி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
சென்னையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனந்தோப்பு ரெயில்வே காலனியில் ரவுடி ஹரி என்கிற அறிவழகனை ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்க முற்பட்டதால் ரவுடி ஹரி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
காயமடைந்த ஹரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
- கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னை:
பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என பொருத்தம் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மூலம் தீர விசாரித்து நடத்தப்படும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. காதல் திருமணம் செய்தவர்களிலும் சிலர் பிரிந்து விடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாத கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் தனி உரிமை எனும் புது கலாசாரத்தை புகுத்தி விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்தும் அளவுக்கு பல தம்பதியர் வந்து விட்டதும் வேதனைக்குரிய விஷயம்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
தமிழகத்தில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் ஏற்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சென்னையில் ஏற்கனவே இருந்து வந்த குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குடும்பநல கோர்ட்டுகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல கோர்ட்டுகளில் இந்த ஆண்டு (2024) வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.
மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் ஆகின.
ஆனால், தற்போது (2024) 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் 6-வது இடத்தில் இருக்கிறது.
2-வது இடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் உத்தரபிரதேசமும் உள்ளது. மேற்குவங்காளம் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் 25 முதல் 35 வயதுடையோர் 50 சதவீதமும், 18 முதல் 25 வயதுடையோர் 35 சதவீதமும், 35 வயதுக்கு மேல் 15 சதவீதமும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பநல கோர்ட்டின் முக்கிய நோக்கம். தவிர்க்க முடியாத சூழலில் தான் விவாகரத்து என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கோர்ட்டின் மையக்கருத்து.
இந்த அடிப்படையில் தான் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.
படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையும் இன்றி வாழ முடியும் என்ற இளம்பெண்களின் அசட்டு தைரியம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் முளையிலேயே கருகும் அபாயத்தை உருவாக்கி விட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கே. சண்டை சச்சரவு எதுவானாலும் விவாகரத்து தீர்வு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போது தான் விவாகரத்து எனும் நோயை விரட்ட முடியும்.






