என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?
    • மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா?

    இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், "பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதற்கு ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதாரத்தை வழங்கவில்லை என்றால் நாளை (ஜனவரி 9] காலை 10 மணிக்கு சீமான் வீட்டிற்கு நேரில் செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • வரும் மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
    • மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

    அதன்படி, வரும் மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள், 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. முதல் மாடியில் கூட்டம் நடைபெற்றது. தரை தளத்தில் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். முதல் தளத்தில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் கீழே இறங்கி வரும்போது, திடீரென நிர்வாகி ஒருவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இதை கவனித்த தமிழிசை சவுந்தரராஜன் விரைவாக ஓடி வந்து வலிப்பு ஏற்பட்ட நிர்வாகிக்கு முதலுதவி செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்தார்.

    பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சவார்த்தை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
    • ஊக்கத்தொகை ரேசன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    ஊக்கத்தொகை ரேசன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழரசனை மும்பை போலீசார் கைது செய்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தமிழரசனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    குத்தாலம்:

    சென்னை சோழிங்கநல்லூர், பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் தமிழரசன் (வயது 35). இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக உள்ளார்.

    என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலை சேர்ந்த தி.மு.க. தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இருந்து சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வருவதற்காக தமிழரசன் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்துள்ளார். தமிழரசன் குறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால், மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழரசனை மும்பை போலீசார் கைது செய்து, மயிலாடுதுறை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மும்பை விரைந்து சென்று, தமிழரசனை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டுக்கு அழைத்து வந்து நீதிபதி கலைவாணியிடம் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து தமிழரசனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தமிழரசனை மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக தமிழரசன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோர்ட்டின் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

    நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

    10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    11-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    12-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    14-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    8-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    9-ந்தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    10-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு நேர்மையுடன் மாற்றி உத்தரவிட்டது அதிமுக அரசு.
    • போராட்டங்களையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் ஆட்சி தான் ஸ்டாலின் சாரின் ஆட்சி.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஸ்டாலின் "SIR"-ன் ஆட்சியைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி கேட்ட "யார்_அந்த_SIR" என்ற ஒற்றைக் கேள்வி. அதற்கு பதில் சொல்லத் திராணி இல்லாமல், சட்டமன்றத்தில் தன் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்டியுள்ளார்.

    பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொன்னால் களங்கம் ஏற்படும் என்று சொல்லும் ஸ்டாலின் SIR, தான் நடத்தும் விடியா ஆட்சியே பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் களங்கம் தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

    "ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று இத்தனை நாட்கள் திமுக அமைச்சர்கள் சொன்னதற்கும், "ஞானசேகரன் திமுக அனுதாபி தான்" என்று இன்று ஸ்டாலின் சார் சட்டமன்றத்தில் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்திற்கும் உள்ள வேறுபாடும்,

    "ஞானசேகரன் மீது திமுக ஆட்சியில் எந்த வழக்கும் இல்லை; அதிமுக ஆட்சியில் தான் வழக்கு பதியபட்டது" என்று திமுக அனுதாபி ஞானசேகரன் பற்றி அமைச்சர் ரகுபதி சார் அளித்த வாக்குமூலமுமே, இந்த வழக்கில் அதிமுக மீண்டும் மீண்டும் எழுப்பும் கேள்வியை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது.

    "இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளி தான்" என்று ஸ்டாலின் சாரின் அரசு இந்த வழக்கை மூட முயற்சித்ததால் தான் #யார்_அந்த_SIR என்ற கேள்வியே மக்களிடையில் எழுந்தது.

    அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இவ்வளவு நாள் பேசாமல், சட்டமன்றத்தின் மாண்பு மீதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதும் துளியும் மரியாதை இல்லாமல் இன்றைக்கு ஸ்டாலின் SIR பேசியிருக்கும் பேச்சு வெட்கக்கேடானது.

    பொள்ளாச்சி வழக்கை CBI விசாரணைக்கு நேர்மையுடன் மாற்றி உத்தரவிட்டது அதிமுக அரசு. ஆனால், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஸ்டாலின் சாரின் அரசு.

    அதிமுகவிற்கு ஒருபோதும் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!

    "போராட்டங்களையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் ஆட்சி தான் ஸ்டாலின் சாரின் ஆட்சி."

    "ஸ்டாலின் சாரின் வெட்கங்கெட்ட ஆட்சிக்கு வேங்கைவயலே சாட்சி"

    "திமுக அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலை. பாலியல் வழக்கே சாட்சி"

    என்று ஸ்டாலின் SIR பேசிய அதே மொழியில் பதில் அளிக்கத் தெரிந்தாலும், ஸ்டாலின் SIR சொன்னது போல் இது ஒரு Sensitive வழக்கு என்பதை உணர்ந்து தான், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் குரலாகவே எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவினர் கேள்வியைக் கேட்டு வருகிறோம் என்பதை மக்கள் அறிவார்கள்.

    மடைமாற்றாமல் பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் SIR- #யார்_அந்த_SIR ?

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



    • சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.
    • தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் தி.மு.க.வினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர்.

    என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிடுவதாக குற்றம்சாட்டிய அவர், தி.மு.க.வினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
    • சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" என்ற பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.

    கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

    தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி கிராமப்புறங்களில் நாட்டுப்புற கலைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.

    குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் நாட்டுப்புற கலைகளை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சென்னையில் "நம்ம ஊர் திருவிழா" நடத்தப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள சென்னைவாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

    சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடத்துவதற்கு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரஸ்வரர் கோவில் திடலில் தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ் மண்ணின் கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடி மகிழ "சென்னை சங்கமம் 2025" மாபெரும் கலைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைவரும் வாரீர்! என்று பதிவிட்டுள்ளார்.

    சென்னையில் 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து மாபெரும் இசை நடன நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

    நம்ம ஊர் திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம் ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்.

    சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.

    இவற்றுடன் மகாராஷ்டிர மாநில லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோரம் மூங்கில் நடனம் ஆகியவை இடம்பெறுகின்றன.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர்.
    • பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும்.

    தமிழகத்தில்பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல் 66 மாவட்டங்களில் நடந்து முடிந்து உள்ளது.

    இந்த தேர்தலில் கிளை, நகரம், மண்டலம், மாவட்ட, முன்னாள் நிர்வாகிகள் வாக்களித்தனர். ஒவவொரு மாவட்டத்திற்கும் 3 பேரை தேர்வு செய்யும் வகையில் 3 பெயர்களை எழுதி வாக்கு பெட்டியில் போட வேண் டும் என்ற அடிப்படையில் இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து பெட்டிகள் சென்னை யில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளான சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், வி.பி.துரை சாமி, சுமதி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை மாவட்ட வாரியாக வாக்கு எண்ணிக்கை நடந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகள் வாங்கிய 3 பேரை தேர்வு செய்தனர். யார் பெயர் அதிகமாக வாக்கு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததோ அதில் இருந்து 3 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

    அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு மையக் குழுவிடம் ஒப்படைத்தனர். மையக்குழு அந்த பட்டியலை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.

    மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்ற பட்டியலில் ஒருவரை தலைவராக தேர்வு செய்து அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் இல்லாத நிலை ஏற்படும்.
    • மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களுக்கு பிறகு தான் மாற்றப்படுகிறது.

    சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

    தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேல் ஊராட்சிகள் உள்ள நிலையில் 371 பஞ்சாயத்துகள் மட்டும்தான் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. அதற்கும் ஆட்சேபனை இருந்தால் 120 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

    ஏதாவது பிரச்சினை இருந்தால் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி கோரிக்கை வைக்கலாம். அப்போது எந்த ஊரை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்க்கலாம், எந்த ஊரை சேர்க்கக்கூடாது என்ற முடிவு எடுக்கப்படும். எந்த ஊராட்சியும் நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சேர்க்க பிரச்சினை செய்வதில்லை,

    ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றும் பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் இல்லாத நிலை ஏற்படும். பல இடங்களில் விளைநிலங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டும் உள்ள இடங்களில் பேரூராட்சிகள் மாற்றப்படுகிறது. அதற்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களுக்கு பிறகு தான் மாற்றப்படுகிறது.

    மாற்று கருத்து இருந்தால் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தால் பரிசீலித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள்.
    • நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை.

    வடலூர்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூர் வந்தார். அங்குள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் அவர் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:-

    தி.மு.க.-அ.தி.மு.க. பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் முக்கிய நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள். முட்டுக்கட்டை நிர்வாகிகளாக இருப்பார்கள்.

    வெள்ளம் சீறிப்பாய்ந்து வரும் போது பாறையாக இருந்தாலும் உருட்டிக் கொண்டு தான் செல்லும். நிர்வாகிகள் விலகியதால் நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை. நிர்வாகிகள் விலகல் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிற்றூர்களையெல்லாம் நகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்.

    கிராமங்களில் இருந்துதான் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வருகிறது. அதனால்தான் எங்களை அப்படியே வாழ விடுங்கள் என்கிறார்கள், இதில் என்ன பிரச்சனை. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது. வில்லேஜ் சிட்டி உள்ளதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×