என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
- வரும் மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
- மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது.
2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி, வரும் மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள், 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






