என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்று சீமான் பேசுகிறார்.
- கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
* கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.
* எதையாவது பேசி கொண்டிருந்தால்தான் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்று சீமான் பேசுகிறார்.
* வாழ்ந்து மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல.
* கரைந்து கொண்டிருக்கும் இயக்கத்தை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது.
* மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தான் தன் பெயர் அடையாளப்படும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறார் என்று அவர் கூறினார்.
- சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
- இருவரின் உறவினர்களும் பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுப்படி மணமக்களை வாழ்த்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பினர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்த இருவரும் சீர்காழி அருகே உள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தில் நேற்று சிவாச்சாரியார்கள் அருண், கணேஷ் முன்னிலையில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நாட்டில் இருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுப்படி மணமக்களை வாழ்த்தினார். தைவான் நாட்டை சேர்ந்தவர்களின் திருமணத்தில் சுற்று வட்டார பகுதி கிராம மக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.
- ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை அருகே கூடல் நகர் ரெயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக 9 ரெயில்கள் இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.35 முதல் மாலை 5.35 மணி வரை மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் 9 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை (16848), நாகர்கோவில் - மும்பை (16352), மதுரை-பிகானிர் ரெயில் (22631), நாகர்கோவில்- கோவை (16321), குருவாயூர்- எழும்பூர் (16128), கோவை-நாகர்கோவில் (16322), ஓகா-ராமேஸ்வரம் (16734), மயிலாடுதுறை-செங்கோட்டை, திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி ஆகியவை மாறறுப்பாதையில் இயக்கப்படுகிறது.
இந்த 9 ரெயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிந்த செய்தி வேதனை அளிக்கிறது.
- நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
- முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறை பகுதியில் உள்ள என்.ராமலிங்கத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும், இவருக்கு சொந்தமான அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இந்த 3 இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி. நிறுவன உரிமையாளர் செல்வசுந்தரம் வீட்டிலும் அதிகாரிகளின் சோதனை நடந்தது. 2-வது நாளாக நேற்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் அலுவலத்தில் சோதனை நடைபெறுகிறது.
கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
- கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
- விற்பனையின் போது வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் 16-ந்தேதி வரை சிறப்பு சந்தை செயல்படுகிறது. விழுப்புரம், கடலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமின்றி மற்ற பகுதி வியாபாரிகளும் பொருட்களை கொண்டு வந்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என கருதப்படுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் ஈடுபட உள்ளனர்.
மேலும் விற்பனையின் போது வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் MBT சாலையில் பேருந்தும், ஈச்சர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.
- தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது.
சென்னை:
பண்டிகைக் காலங்கள் என்றாலே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவரை சாதாரண கட்டணங்களில் இயங்கி வரும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலம் நெருங்கியதும் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துவிடும்.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் வசித்து வரும் வெளியூர் மக்கள் பஸ், ரெயல்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம்.
ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான். காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களை தேர்வு செய்கிறார்கள்.
இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது. அதாவது, வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800, ரூ.850-க்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் தென்மாவட்ட நகரங்களான நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு செல்வதற்கு தனியார் ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதே போன்று, மேற்கு மாவட்டமான கோவைக்கு அதிகபட்சமாக ரூ.2,850 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களின் அதிகபட்சமான கட்டண கொள்ளை ஆன்-லைனில் வெளிப்படையாக இருந்த போதிலும் இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
- ஒரு கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
- தினந்தோறும் 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஒரு கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் காலை, மாலை என தலா 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.
- நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை ஹரிஹரன் செய்து வந்தார்.
- டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.
இளைஞர்கள், மாணவர்களை ஹரிஹரன் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் இது தொடர்பாக புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இவர்களின் மீது 7 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு ஏன்னு சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள். இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இம்மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று ஹரிஹரன் தெரிவித்தார்.
- ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 41 இடங்கள் சேர்ப்பு.
- இதன்மூலம் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கூடுதலாக 41 பணியிடங்களை சேர்த்ததன் மூலம் குரூப்-4 தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- சீமான் ஒரு மனநோயாளி, சீமானுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது- திமுக எம்எல்ஏ எழிலன்.
- கொஞ்சம் கூச்சம், மானம் உள்ளவர்களிடம் ஆதாரம் கேட்கலாம். சீமானிடம் கேட்டு பயனில்லை- சுப. வீரபாண்டியன்.
கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான் தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு அரசியல் கடசி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாஞ்சில் சம்பத் "எந்த தத்துவ பின்புலமும் இல்லாத அரசியல் தரித்திரம் சீமான். பெரியாரை வாசித்து விட்டு விமர்சனம் செய்தால் அதை கருத்தில் கொள்ளலாம். வாசிக்காமல் தான்தோன்றித் தனமாக உளறிக் கொட்டுவது சீமானின் இயல்பு" எனக் கடுமையாக சாடியுள்ளார்.

"சீமான் ஒரு மனநோயாளி, சீமானுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதுபோல் தெரிகிறது. ஆதாரம் இல்லாமல் தந்தை பெரியார் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்" என திமுக எம்எல்ஏ எழிலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுப. வீரபாண்டியன் "சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது என்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவே பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. பெரியாரை குறிவைத்து அல்ல. திமுக அரசை குறிவைத்துதான் இவ்வாறு பேசுகிறார் எனக் கருதுகிறேன்.

வாய்க்கு வந்ததை எல்லாம் கண்டபடி பேசினால் கலவரம் வரும். கலவரம் வந்தால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லிவிடலாம் என்பது அவருக்கு உள்நோக்கமாக இருக்கலாம். அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம்.
இந்த கூற்றுக்கு ஆதாரம் எங்கே இருக்கிறது. கொஞ்சம் கூச்சம், மானம் உள்ளவர்களிடம் ஆதாரம் கேட்கலாம். சீமானிடம் கேட்டு பயனில்லை. நான் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவேளை அப்படி உறவு கொள்வது சீமானின் பழக்கமாக இருக்குமோ? எனத் தெரியவில்லை. பெரியார் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை.
"நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிறார். பெரியார் குறித்த கருத்துகளை சீமான் திரும்பப் பெறாவிடில் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்" கான்ஸ்ட்டைன் ரவீந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.






