என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப் 4"

    • சிட்னியின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான வெட்டர்பர்னில் நிகழ்ந்தது.
    • மற்றொரு விமானம் சேதங்களுடன் தப்பியது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில்,

    ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் 22.10.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 08.12.2025 முதல் 18.12.2025 வரை (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நீங்கலாக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில்லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். 

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.  

    • தேர்வு எழுதும் மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பாக சென்று விட வேண்டும்.
    • 9 மணிக்குப் பிறகு செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 07/2025 நாள் 25.04 2025-இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு நாளை முற்பகல் நடைபெற உள்ளது.

    இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதவுள்ளனர்.

    இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வு தொடர்பான மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4.922 தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Videograph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அதாவது நாளை முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.

    மதுரை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நாளை (12-ந் தேதி) தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக அதிகாரிகள் தனியார் பஸ்சின் கதவுகளுக்கு சீல் வைத்த சம்பவம் விநோதமாக இருந்தது. வழக்கமாக அரசு தேர்வின்போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின்போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தனியார் பஸ்களின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் சீட் ஒட்டி சீல்வைத்து பாதுகாப்பு என கூறி வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினர் நான்காம் தொகுதி பணியாளர்கள் தான்.
    • தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது.

    குரூப் 4 பயிணிடங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும்!

    தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 215 கிராம நிர்வாக அலுவலர்கள், 1099 தட்டச்சர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதி பணியாளர்கள் 3935 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

    தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பேரை மட்டும் தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினர் நான்காம் தொகுதி பணியாளர்கள் தான். தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது.

    அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணியிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட குறைந்தது 2 லட்சம் நான்காம் தொகுதி பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கக்கூடும்.

    அவ்வாறு இருக்கும் போது அதில் வெறும் 2 விழுக்காடு பணியிடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்?

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவை அனைத்தும் நிரப்பப்படுவதுடன், கூடுதலாக 2 லட்சம் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. காலியாக இருப்பதாக திமுகவால் குறிப்பிடப்பட்ட மூன்றரை லட்சம் காலியிடங்களில் குறைந்தது ஒரு லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

    அவற்றுடன் கடந்த நான்காண்டுகளில் குறைந்தது 30 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்களாவது ஓய்வு பெற்றிருக்கக் கூடும். அதன்படி நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களில் வெறும் 15 விழுக்காட்டை மட்டும் தான் திமுக அரசு நிரப்பியிருக்கிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு சேர்த்து 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    ஒட்டுமொத்தமாக இதுவரை 19,071 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது வெறும் 3935 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல. இது கடந்த நான்காண்டுகளில் புதிதாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்குக் கூட போதாது.

    தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அது வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அது குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது மொத்த அரசுப் பணியிடங்கள் எத்தனை? காலியிடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் காலியான இடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் நிரப்பப்பட்ட இடங்கள் எத்தனை? இப்போது ஒவ்வொரு துறையிலும் காலியாக இருக்கும் இடங்கள் எத்தனை? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் தொகுதி பணியாளர் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 10 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தி முடித்தது.
    • குரூப்-4 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு, அதற்கான தேர்வை கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ம் தேதி நடத்தி முடித்தது.

    இந்தத் தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வை எழுதிய தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

    தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஆனாலும் தேர்வு முடிவு வெளியிடப்பட இல்லை. 4-வது முறையாக மார்ச் மாதத்துக்குள் (இந்த மாதம்) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் குரூப்-4 தேர்வு முடிவை வெளியிடக் கோரி டுவிட்டரில் ஹேஷ்டேக் செய்தனர்.

    இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்-4-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.7.2022 அன்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.2.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

    • கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.
    • தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

    இந்த வரிசையில், கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 6 வேலை நாட்களில் இந்த பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை வருகிற 21-ந்தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

    • ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 41 இடங்கள் சேர்ப்பு.
    • இதன்மூலம் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    குரூப் 4-ல் கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    கூடுதலாக 41 பணியிடங்களை சேர்த்ததன் மூலம் குரூப்-4 தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 9532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா்.
    • குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.

    ஊட்டி:

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.


    ஊட்டியில் சி.எஸ்.ஐ.சி. எம்.எம். உயா்நிலைப் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனிக் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், ஊட்டி வட்டத்தில் உள்ள 15 மையங்களில் 4,032 போ், குன்னூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,054 போ், கூடலூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,151 போ், கோத்தகிரி வட்டத்தில் உள்ள 5 மையங்களில் 1,370 போ்,

    குந்தா வட்டத்தில் உள்ள 2 மையங்களில் 319 போ், பந்தலூா் வட்டத்தில் உள்ள 4 மையங்களில் 1,225 போ் என 40 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 8,763 போ் தோ்வு எழுதினா். இது 78.58 சதவீதம் ஆகும். 2,388 போ் தோ்வு எழுதவில்லை.

    இத்தோ்வினை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பறக்கும் படை அலுவலா்கள், 6 வட்டங்களில் 6 மேற்பா ா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக் கூடங்களை கண்காணிக்க சம்பந்த ப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் நிலையில் மொத்தம் 40 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    தோ்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணி யாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள வழிமு றைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன.

    நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் கிருஷ்ணகுமாா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    • கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    மதுரை:

    மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி(வயது 47) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகள் பிறந்த பின்பு வளர்மதி, பி.ஏ. தமிழ் படித்துள்ளார். தற்போது இவருடைய மகள் சத்யபிரியா பிளஸ்-2 படித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி உள்ளார். கடந்த முறை வளர்மதி டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதி 160-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அரசு அறிவிப்பு வெளியான உடன் தாயும் மகளும் குரூப்-4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால் டிக்கெட் வந்தது. இதையடுத்து நேற்று அந்த மையத்தில் தாயும்-மகளும் குரூப்-4 தேர்வு எழுதினர்.

    • தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
    • சென்னையில் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த வகையில் 9.35 லட்சம் ஆண்கள், 12.67 லட்சம் பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7,689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்நிலையில், குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
    • சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    சென்னை:

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஆர்வமுடன் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த வகையில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள 316 தாலுகா மையங்களில் வரும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

    மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    ×