search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் 2,388 பேர் ஆப்சென்ட்
    X

    நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் 2,388 பேர் ஆப்சென்ட்

    • நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா்.
    • குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.

    ஊட்டி:

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 4 தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 8,763 போ் எழுதினா்.


    ஊட்டியில் சி.எஸ்.ஐ.சி. எம்.எம். உயா்நிலைப் பள்ளி, பிரிக்ஸ் பள்ளி, சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, யுனிக் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வினை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு எழுத 11,151 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், ஊட்டி வட்டத்தில் உள்ள 15 மையங்களில் 4,032 போ், குன்னூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,054 போ், கூடலூா் வட்டத்தில் உள்ள 7 மையங்களில் 2,151 போ், கோத்தகிரி வட்டத்தில் உள்ள 5 மையங்களில் 1,370 போ்,

    குந்தா வட்டத்தில் உள்ள 2 மையங்களில் 319 போ், பந்தலூா் வட்டத்தில் உள்ள 4 மையங்களில் 1,225 போ் என 40 மையங்களில் நடைபெற்ற தோ்வில் மொத்தம் 8,763 போ் தோ்வு எழுதினா். இது 78.58 சதவீதம் ஆகும். 2,388 போ் தோ்வு எழுதவில்லை.

    இத்தோ்வினை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பறக்கும் படை அலுவலா்கள், 6 வட்டங்களில் 6 மேற்பா ா்வை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். தோ்வுக் கூடங்களை கண்காணிக்க சம்பந்த ப்பட்ட கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றில் உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் நிலையில் மொத்தம் 40 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, தோ்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    தோ்வையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணி யாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ள வழிமு றைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு தோ்வுகள் நடைபெற்றன.

    நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் கிருஷ்ணகுமாா் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×