என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நிர்வாகிக்கு திடீர் வலிப்பு: முதலுதவி செய்த தமிழிசை சவுந்தரராஜன்
- சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சென்னை கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. முதல் மாடியில் கூட்டம் நடைபெற்றது. தரை தளத்தில் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். முதல் தளத்தில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் கீழே இறங்கி வரும்போது, திடீரென நிர்வாகி ஒருவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதை கவனித்த தமிழிசை சவுந்தரராஜன் விரைவாக ஓடி வந்து வலிப்பு ஏற்பட்ட நிர்வாகிக்கு முதலுதவி செய்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்தார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சவார்த்தை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.






