என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சாமிநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். அ.தி.மு.க. நிர்வாகியான இவர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேறு ஒருவரின் சைக்கிளை மாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சாமிநாதனிடம் சென்று கேட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் இரண்டு பெண்களில் ஒருவரை கீழே தள்ளி மானபங்கம் செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி பேரணி.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் இன்று மதியம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பழமையான சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயம் முன்பாக பிரார்த்தனை நடத்தி விட்டு வெளியே வரும் கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதே பகுதியில் பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமானை கண்டிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமான் புகைப்படத்தை ஒருபுறம் நாம் தமிழர் கட்சி போலவும், மறுபுறம் பா.ஜ.க.வின் காவி உடை அணிந்தப்படி இருப்பது போல கார்டூன் புகைப்படத்தை போட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதனால் நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
சீமானுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சென்று தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் 2 தரப்பினரையும் அப்பகுதியை விட்டு வெளியே செல்லக்கூறியதை தொடர்ந்து மீண்டும் தேவாலயம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் பிரார்த்தனை முடித்து வெளியே வரும் கிறிஸ்தவர்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் பேரணியாகச் சென்றனர். மேலும் இந்த மோதல் சம்பவத்தின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பன்னீர்செல்வம் பூங்காவில் குவிக்கப்பட்டு ள்ளனர்.
இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சியினர் மீது பதில் தாக்குதல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
நாளை மாலை பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் கிழக்கு தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
- கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).
இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும்.
- இது உழவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்றும், அந்த மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அதிகாரம் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தமிழ்நாட்டு உழவர்களுக்கு திமுக அரசு இழைக்கும் பெரும் துரோகம் ஆகும். இது உழவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். மாநில அரசின் உரிமைகளையும், உழவர்களின் நலன்களையும் மத்திய அரசிடம் தாரை வார்த்திருக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
- தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திண்டுக்கல்:
இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் கந்தன் மலையை காப்பாற்றக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தனர் . இதில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் 100 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் குமரன் திருநகரில் உள்ள மாநில தொண்டரணி தலைவர் மோகன் என்பவரை நகர் வடக்கு போலீசார் அதிரடியாக கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
அதேபோல் வேடசந்தூரில் அகில இந்திய இந்து மகா சபா தேசிய துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகி சரவண பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோரையும் வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் பகுதியில் வ.உ.சி. மக்கள் இயக்கம் மற்றும் ஒக்கலிக்கர் இளைஞர் பேரவையின் சார்பாக திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என போஸ்டர் அடிக்கப்பட்டது.
இந்த போஸ்டரை வேடசந்தூர் பகுதியில் ஒட்டுவதற்காக ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 30), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (30) ஆகியோர் ஒட்டியுள்ளனர்.
2 பேர் மீதும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
தகவல் அறிந்த இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மாரிமுத்து, வ.உ.சி. மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் முருகேசன், ஒக்கலிகர் இளைஞர் பேரவை அமைப்பின் தலைவர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடினர்.
போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 -23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
- கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
பண்ருட்டி:
முகூர்த்த நாளையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவிலில் இன்று 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் 56-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்துவதற்கு அவர்களின் உறவினர்களும் அதிக அளவில் வருகை தந்ததால், கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கோவிலில் ஆங்காங்கே நின்றவாறு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கோவில் அருகே மணமக்கள் போட்டோஷூட்களை நடத்தினர். தற்போது கோவிலுக்குள் உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மாட வீதியில் உள்ள தனியார் வீடுகள், மண்டபங்கள் சாலைகளில் உணவு அருந்தினர். மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- 10 வருடங்களுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது.
- மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை அரசரடி எல்லீஸ் நகர் பகுதியில் எரோசா என்ற பெயரில் மருத்துவமனை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் என்று கூறிக்கொண்டு சீதாலட்சுமி நகரை சேர்ந்த ஆரோக்கிய ராணி (வயது 56) என்பவர் பலருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை நாராயணபுரதத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவருக்கு கை, கால் நடுக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
சிகிச்சையில் சந்தேகம் அடைந்த வழக்கறிஞர் தனக்கு மருத்துவம் பார்த்த ராணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 31-ந்தேதி மதுரை, உசிலம்பட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று டாக்டர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் சந்திரன், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சதீஷ், இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசரடி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஆரோக்கிய ராணி நோயாளி களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இணை இயக்குநர் செல்வராஜ், ஆரோக்கிய ராணி மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் அந்த மருத்துவமனையில் 5 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த மருத்துவமனையில் 4 பேர் செவிலியர்களாகவும் வேலை பார்த்து வந்தனர்.
மேலும் உரிய மருத்துவ தகுதி எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வகையில் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
ஆரோக்கிய ராணி 10-ம் வகுப்பு வரை படித்திருந்ததாகவும், நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அளித்த வந்ததும் தெரிந்தது.
இது குறித்து டாக்டர் செல்வராஜ் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆரோக்கிய ராணி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலியாக மருத்துவம் பார்த்த ஆரோக்கிய ராணியையும் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த பெண் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருப்பதில் பெருமகிழ்வு.
- அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள வழிவகை செய்வோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதனை பாராட்டி அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெண்கலக் கால (Bronze Age: 2,000BC to 700 BC) நாகரிகத்துக்கு பின்நோக்கி சென்று ஆரிய- திராவிட கலாச்சார போரை முடிவுக்கு கொண்டு வரும் பெரும் முயற்சி என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு இனத்தின் வரலாற்றைத் துடைத்தெறிய வேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதும். அத்தகைய முயற்சிகளை அறிவியலின் துணைக் கொண்டு முறியடித்து வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனை அங்கீகரிக்கும் வகையில் புகழ்பெற்ற 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருப்பதில் பெருமகிழ்வு.
தமிழ் இனத்தின் பெருமையும், வரலாறும் உலகெங்கும் கொடி கட்டி பறக்கட்டும்! என தெரிவித்துள்ளார்.
- கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.
- தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகம் இன்று 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் உள்ள தலைமை கழகத்தில் விஜய் கொடியேற்றி வைத்து கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தொண்டர்களுக்கு விஜய் இனிப்பு வழங்கினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.
மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
- 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகப்பட்டினம்:
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் நாகை வீர தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சார்பாக நாகை அடுத்த பாப்பா கோவில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாகை,வேலூர், திருச்சி,தஞ்சை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்கள் சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகை வீர தமிழன் சிலம்ப கலைக்கூடத்தின் ஆசான் சரவணன் கூறும்போது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கு பெற செய்ததற்கான முக்கிய காரணம் இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் போதையில்லா சமுதாயம் உருவாகிடவும், போதையினால் ஏற்படும் தீமைகளை மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு விதைப்பதன் மூலம் அதன் தீமைகளை குறித்து அவர்கள் அறிந்து கொள்வதோடு சமுதாயத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கிங்காங் பங்கு பெற்று மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இடைவிடாமல் 3 மணி நேரம் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேர்ல்ட் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு அசோசியேஷன் செகரட்டரி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பதிவு செய்தார்.
- நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் சீமானுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்தனர். அப்போது அதே பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்தவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






