என் மலர்
ராஜஸ்தான்
- பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 23 ஆம் தேதி பஞ்சாபில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார்.
- பணத்துக்காக அவர் உளவு பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மரில் வசிக்கும் பதான்கான் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை கைது செய்தது. ஒரு மாதத்துக்கு முன்பே அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது தான் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பதான்கான் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார். பணத்துக்காக அவர் உளவு பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 48 ரன்கள் சேர்த்தார்.
நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐ.பி.எல்லில் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப் பறித்தார்.
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை பஞ்சாப்பும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.
ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 3 வெற்றி, 8 தோல்வி என எட்டாவது இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.
- சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்விகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த சந்தீப் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்தீப் சர்மா இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 9 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மாவுக்கு பதில் ஆகாஷ் மத்வால் சேர்க்கப்பட்டார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்தது.
- கிரிஜா வியாசின் இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது.
- அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79), ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது. அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் குவித்தது.
ஜெய்ப்பூர்:
18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ரன்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோகித் 53 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து இணைந்த சூரியகுமார் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி கடைசி வரை நின்றது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
ஹர்திக் பாண்ட்யா, சூரியகுமார் தலா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் அவுட்டானார். 2வது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். 4வது ஓவரில் நிதிஷ் ரானா, 5வது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் அவுட்டாகினர்.
அடுத்து வந்த ஷுபம் துபே, துருவ் ஜுரலும் நிலைத்து நிற்கவில்லை
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் 6-வது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
- "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
- ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.
ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
"பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.
- மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள்.
- நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
* மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது
* நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.
* நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
* இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது
* காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.
* நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.
* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
- இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
- மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் ஷ்யாம் நகரில் உள்ள ஒரு பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் பெயர் சூட்டப்படும் என்று நகர மேயர் பிரமிளா பாண்டே இன்று அறிவித்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த 31 வயதான சுபம் திவேதி, இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அவரது மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.
மேலும் அஷான்யா விரும்பினால் கான்பூர் நகராட்சியில் அவுட்சோர்சிங் வேலை வழங்குவோம் என்றும் மேயர் பிரமிளா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக நேற்று அவருக்கு அந்நகரில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு நடத்தபட்டது. பஹல்காம் பயங்ரவாத தாக்குதலில் சுபம் திவேதி உட்பட 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
- தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.
நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.
இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.
மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.
தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- 19 இடங்களில் சோதனை நடத்தினர்.
- அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள பொது சுகாதார பொறியியல் துறையில் மேற்பார்வை என்ஜினீயராக அசோக்குமார் ஜாங்கிட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெய்ப்பூர், கோட்புட்லி, உதய்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அசோக்குமார் ஜாங்கிட்டின் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் அவரது பெயரில் உள்ள 19 சொத்துக்கள், அவரது மனைவி சுனிதா சர்மா பெயரில் 3 சொத்து மற்றும் மகன் நிகில் ஜாங்கிட் பெயரில் 32 சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தத்தில் அவர் ரூ.11½ கோடிக்கு மேல் சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் அவரது சட்டப்பூர்வ வருமானத்தை விட சுமார் 161 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.






