search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvRR"

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் பறந்து பறந்து மூன்று கேட்ச்கள் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். #IPL2018 #RR
    ஐபிஎல் தொடரின் 47-வது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மிக்க சந்தோசத்துடன் பந்து வீச்சு தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்து வீசினாலும், பீல்டர்கள் அடுத்தடுத்து கேட்ச்களை நழுவ விட்டனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அப்செட் ஆனது.



    அதுவும் தொடக்க வீரர்கள் சூர்ய குமார் யாதவ், லெவிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவித்து விடுமோ என்று அந்த அணி அஞ்சியது. ஆனால், சஞ்சு சாம்சன் அபாரமாக பீல்டிங் செய்தார். மூன்று கேட்ச்களை பிரமாண்டமாக பிடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தடைபோட்டார்.



    2-வது ஓவரை தவால் குல்கர்னி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை மிட்ஆன் திசையில் அடித்தார். பந்து மிட்ஆன் பீல்டர் கவுதமை நோக்கிச் சென்றது. அவருக்கு சற்று முன் பிட்ச் ஆகிய பந்தை பிடிக்க தவறினார். பந்தை நோக்கி கையை கொண்டு சென்ற போதிலும், கைகளுக்கு இடையில் பந்து சென்று தரையை தொட்டது. இதனால் 9 ரன்னில் இருந்து தப்பிய சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    3-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெவிஸ் லெக் சைடில் தூக்கி அடித்தார். பந்து எட்ஜ் ஆகி மிக உயரமாக சென்று ஸ்டூவர்ட் பின்னி நோக்கி வந்தது. நேராக வந்த பந்தை கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 5 ரன்னில் இருந்து தப்பிய லெவிஸ் 42 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.



    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பென் கட்டிங் அடித்த பந்தை ஆர்சர் கேட்ச் பிடிக்க தவறவிட்டார். இதனால் ஒரு ரன்னில் தப்பிய பென் கட்டிங் 10 ரன்கள் அடித்தார். மாறாக சஞ்சு சாம்சன் லெவிஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அத்துடன் இஷான் கிஷானை 12 ரன்னில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    3-வதாக கடைசி ஓவரின் 5-வது பந்தை ஹர்திக் பாண்டியா லெக் சைடு தூக்கி அடித்தார். அந்த பந்தை சஞ்சு சாம்சன் அந்தரத்தில் பறந்த கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.

    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. 11-ந்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.



    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்தார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவுட்டாகாமல் 95 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதங்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை வீரேந்தர் சேவாக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் தாக்குப்பிடித்து வருகிறது.
    மும்பை வான்கடேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். #IPL2018 #MIvRR
    மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் அடித்தது. அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

    மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 12-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 37 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் ரன் குவிக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா தலையில் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.


    ஹர்திக் பாண்டியா பந்தை உபர் கட் செய்த காட்சி

    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார் ஹர்திக் பாண்டியா. அதோடு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை சர்வசாதரணமாக ஆஃப் சைடு சிக்ஸ்க்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது.


    அரைசதம் அடித்த லெவிஸ்

    கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அதை சஞ்சு சாம்சன் பறந்து சென்று கேட்ச் பிடித்தார். ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ×