search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanju samson stunning catches"

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்ட நிலையில் பறந்து பறந்து மூன்று கேட்ச்கள் பிடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். #IPL2018 #RR
    ஐபிஎல் தொடரின் 47-வது ஆட்டம் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மிக்க சந்தோசத்துடன் பந்து வீச்சு தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்து வீசினாலும், பீல்டர்கள் அடுத்தடுத்து கேட்ச்களை நழுவ விட்டனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் அப்செட் ஆனது.



    அதுவும் தொடக்க வீரர்கள் சூர்ய குமார் யாதவ், லெவிஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவித்து விடுமோ என்று அந்த அணி அஞ்சியது. ஆனால், சஞ்சு சாம்சன் அபாரமாக பீல்டிங் செய்தார். மூன்று கேட்ச்களை பிரமாண்டமாக பிடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தடைபோட்டார்.



    2-வது ஓவரை தவால் குல்கர்னி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை மிட்ஆன் திசையில் அடித்தார். பந்து மிட்ஆன் பீல்டர் கவுதமை நோக்கிச் சென்றது. அவருக்கு சற்று முன் பிட்ச் ஆகிய பந்தை பிடிக்க தவறினார். பந்தை நோக்கி கையை கொண்டு சென்ற போதிலும், கைகளுக்கு இடையில் பந்து சென்று தரையை தொட்டது. இதனால் 9 ரன்னில் இருந்து தப்பிய சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

    3-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெவிஸ் லெக் சைடில் தூக்கி அடித்தார். பந்து எட்ஜ் ஆகி மிக உயரமாக சென்று ஸ்டூவர்ட் பின்னி நோக்கி வந்தது. நேராக வந்த பந்தை கேட்ச் பிடிக்க தவறினார். இதனால் 5 ரன்னில் இருந்து தப்பிய லெவிஸ் 42 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.



    19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பென் கட்டிங் அடித்த பந்தை ஆர்சர் கேட்ச் பிடிக்க தவறவிட்டார். இதனால் ஒரு ரன்னில் தப்பிய பென் கட்டிங் 10 ரன்கள் அடித்தார். மாறாக சஞ்சு சாம்சன் லெவிஸ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அத்துடன் இஷான் கிஷானை 12 ரன்னில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    3-வதாக கடைசி ஓவரின் 5-வது பந்தை ஹர்திக் பாண்டியா லெக் சைடு தூக்கி அடித்தார். அந்த பந்தை சஞ்சு சாம்சன் அந்தரத்தில் பறந்த கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
    ×