search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    67, 51, 82, 95, 94 - சேவாக் சாதனையை சமன் செய்தார் பட்லர்
    X

    67, 51, 82, 95, 94 - சேவாக் சாதனையை சமன் செய்தார் பட்லர்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பட்லர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசி வீரேந்தர் சேவாக் சாதனையை சமன் செய்துள்ளார்.#IPL2018 #MIvRR
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.

    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. 11-ந்தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.



    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்தார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவுட்டாகாமல் 95 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதங்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற சாதனையை வீரேந்தர் சேவாக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் தாக்குப்பிடித்து வருகிறது.
    Next Story
    ×