என் மலர்
நீங்கள் தேடியது "RRvMI"
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ்அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை பஞ்சாப்பும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.
ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 3 வெற்றி, 8 தோல்வி என எட்டாவது இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.
- 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
- இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.
- முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
- ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.






